பள்ளி படத்தில் சர்ச்சை கேள்விகள்: மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்!

 

பள்ளி படத்தில் சர்ச்சை கேள்விகள்: மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்!

பள்ளி பாடத்தில் கேட்கப்பட்டுள்ள சர்ச்சைக் கேள்விகளுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பள்ளி பாடத்தில் கேட்கப்பட்டுள்ள சர்ச்சைக் கேள்விகளுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கேள்விகள்  சமூகவலைதளங்களில்  வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. 
அதில்,தலித் என்பவர்கள் யார்? என்ற கேள்விக்கு, வெளிநாட்டவர், தீண்டத்தகாதவர்கள், நடுத்தர வகுப்பினர், உயர் வகுப்பினர் என்று பதில்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அதே போல் மற்றொரு கேள்வியில், முஸ்லிம்களின் பொதுப்பண்புகள் என்ன? என்ற கேள்விக்கு, பெண்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள், சைவ உணவை மட்டும் உண்பவர்கள், நோன்பு காலத்தில் உறங்காதவர்கள், இவையனைத்தும் என்று பதில்கள் கொடுக்கப்பட்டன.

 

text

இதுகுறித்து விளக்கமளித்துள்ள கேந்திரிய வித்யாலயா கல்வித்துறை, இந்த வினாக்கள் தேசிய கல்வி ஆராய்ச்சி மையத்தால் 2018-2019 கல்வியாண்டில் அச்சடிக்கப்பட்டுள்ளன. என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் எந்த பள்ளியினுடையதாகவும் இவை இருக்கலாம் என்று பதிலளித்தது. இருப்பினும் இந்த விவாகரத்திற்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

 

இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘சாதி பாகுபாட்டையும் வகுப்புவாதத்தையும் பரப்பும் கேள்விகள் கேந்திரிய வித்யாலயா 6ம் வகுப்புத் தேர்வில் இடம்பெற்றிருப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன். இப்படிப்பட்ட கேள்விகளை இடம்பெறச் செய்தவர்கள் விசாரிக்கப்பட்டு உரிய சட்டங்கள் மூலம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.