பள்ளி குழந்தைகளிடம் வாகனங்களை தந்தால், கம்பியெண்ண வேண்டிவரும், ஜாக்கிரதை!

 

பள்ளி குழந்தைகளிடம் வாகனங்களை தந்தால், கம்பியெண்ண வேண்டிவரும், ஜாக்கிரதை!

திருத்தப்பட்ட வாகனச் சட்டத்தின்படி, அதிக அபராதம் விதிக்கப்படுவதே குழந்தைகள் வண்டிஓட்ட அனுமதிக்கும் பெற்றோருக்குத்தான், 25,000 ரூபாய். எனவே, ”என்னா அழகா வண்டி ஓட்டுது என் பிள்ளை” என உச்சிமுகராமல், பிள்ளைகுட்டிகளை படிக்கவையுங்கள், இல்லையென்றால் உங்களை கம்பி எண்ண வைத்துவிடுவார்கள். ஜாக்கிரதை!

“பதினைஞ்சு வயசுகூட இன்னும் ஆகல, அதுக்குள்ள என் புள்ள என்னம்மா வண்டி ஓட்டுறான்” “பத்தாம் கிளாஸ் படிச்சாலும் என் பொண்ணு பசங்களைவிட சூப்பரா ஸ்கூட்டி ஓட்டுவா” என தங்கள் பிள்ளைகளின் பெருமை பேசும் பெற்றோரே உஷார் உஷார். திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி, 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் சிறுமிகள் வாகனம் ஓட்டினால், பெற்றோருக்கு 25,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்கும். அதுமட்டுமல்ல, குற்றமிழைக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் அவர்களின் 25ஆவது வயதுவரை ஓட்டுநர் உரிமம் கிடைக்காது.

Minors driving/riding dangerously

இது தொடர்பா போக்குவரத்து அதிகாரிகள் தெரிவிக்கும் புகார் என்னவென்றால், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பைவிட, இப்போது வண்டி ஓட்டும் சிறுவர்களின் எண்ணிக்கை 15%மும், கார் ஓட்டும் சிறுவர்களின் எண்ணிக்கை 2%மும் அதிகமாகியிருக்கிறது. குழந்தைகளின் ஆசைக்காகவும், தங்களின் பெருமைக்காகவும் அவர்களிடம் வாகனங்களை பெற்றோர் தருவதால், அவர்கள் உயிருக்கும் பிறருக்கும் ஆபத்தை விளைவிக்கும். திருத்தப்பட்ட வாகனச் சட்டத்தின்படி, அதிக அபராதம் விதிக்கப்படுவதே குழந்தைகள் வண்டிஓட்ட அனுமதிக்கும் பெற்றோருக்குத்தான், 25,000 ரூபாய். எனவே, ”என்னா அழகா வண்டி ஓட்டுது என் பிள்ளை” என உச்சிமுகராமல், பிள்ளைகுட்டிகளை படிக்கவையுங்கள், இல்லையென்றால் உங்களை கம்பி எண்ண வைத்துவிடுவார்கள். ஜாக்கிரதை!