பள்ளிப் பேருந்துக்கு ரூ.41 லட்சம் அபராதம் ! சிறிய வாகனங்களில் மாணவர்களை அழைத்து செல்லக்கூடாது என கோர்ட் அதிரடி !

 

பள்ளிப் பேருந்துக்கு ரூ.41 லட்சம் அபராதம் ! சிறிய வாகனங்களில் மாணவர்களை அழைத்து செல்லக்கூடாது என கோர்ட் அதிரடி !

மகாராஷ்டிராவில் பாதுகாப்பற்ற பள்ளிப் பேருந்துகளை இயக்கியதாக 41 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் பாதுகாப்பற்ற பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். 

மகாராஷ்டிராவில் பாதுகாப்பற்ற பள்ளிப் பேருந்துகளை இயக்கியதாக 41 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் பாதுகாப்பற்ற பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். 
அதில், மும்பையில் 257 பள்ளி பேருந்துகள் மற்றும் மாணவர்களை அழைத்து செல்லும் 278 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 32 பள்ளி பேருந்துகள் உட்பட 113 வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வாகனங்களுக்கு ரூ .1.8 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் 5,784 பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டு ரூ .41 லட்சத்துக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

School-Bus

பள்ளிப் பேருந்துகள் பாதுகாப்பற்ற முறையில் இயக்கப்படுவதாகவும், சிறி வேன்கள் மாணவர்களை அழைத்து செல்வதற்கு தடை விதிக்குமாறு பெற்றோர்-ஆசிரியர் சங்க யுனைடெட் மன்றம் 2016 இல் தாக்கல் செய்த பொதுநல மனுவை ஐகோர்ட் விசாரித்தது. இந்த விசாரணையில் அபாராதம் மட்டுமே தண்டனை கிடையாது என்றும், அனுமதிக்கப்படாத சிறிய வேன்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம், சிறிய வேன்களுக்கு தடை விதிக்குமாறு உத்தரவு பிறப்பித்தது. மேலும் ஆட்டோக்களுக்கு அபராதம் விதித்த உடனேயே மீண்டும் மீண்டும் விதிகளை மீறுவதால் நடவடிக்கை எடுப்பதில் சிரமம் உள்ளதாகவும் அரசு தரப்பி தெரிவிக்கப்பட்டது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கென அரசு தரப்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட திட்டம் தோல்வி அடைந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.