பள்ளிக்குழந்தைகளுடன் அசுர வேகத்தில் சென்ற வேன் – 17 வயது சிறுவனை கைது செய்த போலீஸ்

 

பள்ளிக்குழந்தைகளுடன் அசுர வேகத்தில் சென்ற வேன் – 17 வயது சிறுவனை கைது செய்த போலீஸ்

பெங்களூருவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு தாறுமாறாக வாகனத்தை ஓட்டிச் சென்ற சிறுவனை போலீஸ் கைது செய்தது. 
பொம்மனஹள்ளி இடத்தில் பெகர் ஜங்ஷன் அருகே பள்ளிக்குழந்தைகளுடன் சென்ற வேன் ஒன்று அசுர வேகத்தில் செல்வதை மடிவாலா போக்குவரத்து காவலர்கள் பார்த்தனர்.

பெங்களூருவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு தாறுமாறாக வாகனத்தை ஓட்டிச் சென்ற சிறுவனை போலீஸ் கைது செய்தது. 
பொம்மனஹள்ளி இடத்தில் பெகர் ஜங்ஷன் அருகே பள்ளிக்குழந்தைகளுடன் சென்ற வேன் ஒன்று அசுர வேகத்தில் செல்வதை மடிவாலா போக்குவரத்து காவலர்கள் பார்த்தனர். இதையடுத்து அந்த வாகனத்தை துரத்திச் சென்று மடக்கி பிடித்தபோது அதை ஓட்டிச் சென்றது ஒரு சிறுவன் என்பது தெரிய வந்தது. எச்.எஸ்.ஆர் லே அவுட் பகுதியில் பள்ளியில் இருந்து குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்ற அந்த சிறுவன் வாகனத்தை கண்மூடித்தனமாக இயக்கி வந்துள்ளான். அந்த சிறுவனை கைது செய்த போலீஸ் குழந்தைகளின் பெற்றோரை அழைத்து விசாரணை செய்தது. அந்த வேன் பள்ளிக்கு சொந்தமானது இல்லை என்றும் தனியாருக்கு சொந்தமான அந்த வாகனத்தில் வேன் ஓட்டுநரை பற்றி சரிவர விசாரிக்காமல் பெற்றோர்கள் பிள்ளைகளை அனுப்பி வந்ததும் தெரிய வந்தது. பிள்ளைகளை தனியார் வாகனங்களில் அனுப்பும் பெற்றோர் வாகனங்கள் சரியாக இருக்கிறதா, வேன் ஓட்டுநர்கள் அனுபவம் வாய்ந்தவர்களா என்று விசாரித்து அனுப்பவேண்டும் என்று பெங்களூரு காவல்துறை கூறி இருக்கிறது.