பள்ளிகளில் ஏப்ரல் மாதத்துக்கு முன் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது : அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!

 

பள்ளிகளில் ஏப்ரல் மாதத்துக்கு முன் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது : அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!

அட்மிஷன் கிடைக்காத காரணத்தால் இப்போதெல்லாம் பிறந்த குழந்தைகளுக்குக் கூட பள்ளிகளில் அட்மிஷன் போட்டு விடுகிறார்கள்.

அட்மிஷன் கிடைக்காத காரணத்தால் இப்போதெல்லாம் பிறந்த குழந்தைகளுக்குக் கூட பள்ளிகளில் அட்மிஷன் போட்டு விடுகிறார்கள். பெரும்பாலான தனியார் பள்ளிகளில் கல்வியாண்டு முடிவதற்கு முன்னரே மாணவர் சேர்க்கை நடந்து முடிந்து விடும். இதனால் மாணவர்களின் தேர்ச்சி விவரங்கள் அறிந்து கொண்டு பள்ளியில் சேர்க்கப் போகும் ஆசிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இதனால் சில குழந்தைகள் படிக்க முடியாத சூழலும் நிலவுகிறது. 

ttn

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தி முடிக்கக் கூடாது. அப்படி நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். விளம்பரங்களை கொடுத்து அட்மிஷன்களை கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னரே முடிக்கக் கூடாது. தனியார் டியூஷன் மையங்களும் அரசின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வரப்பட்டு, அனுமதி பெற்றுத் தான் நடத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்