பல வருட போராட்டங்களுக்குப் பிறகே விலக முடிவு! – மனம் திறந்த இளவரசர் ஹாரி

 

பல வருட போராட்டங்களுக்குப் பிறகே விலக முடிவு! – மனம் திறந்த இளவரசர் ஹாரி

பல வருடப் போராட்டங்கள், பல மாத பேச்சு வார்த்தைக்குப் பிறகே அரச குடும்பத்திலிருந்து விலக முடிவெடுத்ததாக இளவசரர் ஹாரி மனம் திறந்துள்ளார்.பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மெர்க்கல் விலகியதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியான நேரத்தில் ஹாரி பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.

பல வருடப் போராட்டங்கள், பல மாத பேச்சு வார்த்தைக்குப் பிறகே அரச குடும்பத்திலிருந்து விலக முடிவெடுத்ததாக இளவசரர் ஹாரி மனம் திறந்துள்ளார்.

rani

பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மெர்க்கல் விலகியதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியான நேரத்தில் ஹாரி பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“நீங்கள் இதுவரை எங்கோ கேட்டோ அல்லது படித்தோதான் இந்த விஷயத்தைத் தெரிந்துகொண்டிருப்பீர்கள். நான் இது பற்றி கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள். இதை நான் இளவரசனாக இல்லாமல் ஹாரியாக சொல்ல விரும்புகிறேன். ராணி இரண்டாம் எலிசபெத்தின் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவரது ஆணைக்கு எப்போதும் கட்டுப்படுகிறேன். 

hairs

அரச குடும்பத்தின் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக நான் எடுத்த முடிவு சாதாரணமானது இல்லை. நான் எடுத்த முடிவுகள் சரியானது என்று நான் கூறவில்லை. ஆனால் இந்த விஷயத்தில் வேறு வழியில்லை. பல ஆண்டு போராட்டங்களுக்குப் பிறகு பல மாத பேச்சு வார்த்தைக்குப் பிறகு நான் எடுத்த முடிவு இது.
நானும் எனது மனைவியும் மிகுந்த வருத்தத்துடன் அரச குடும்பத்திலிருந்து வெளியேறுகிறோம். என் மனைவி, மகன் ஆர்க் ஆகியோருடன் அமைதியான வாழ்க்கை வாழ அரச பதவியை கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.