பல மணிநேரம் பட்டினியால் காத்திருக்கும் கொரானா கொடுமை -இலவச உணவுக்கு இரவெல்லாம் நிற்கிறார்கள் ..

பல மணிநேரம் பட்டினியால் காத்திருக்கும் கொரானா கொடுமை -இலவச உணவுக்கு இரவெல்லாம் நிற்கிறார்கள் ..

டெல்லியில் ஒரு சாலையில் காலையில் பைகள், பாத்திரங்கள் , வாளிகளுடன் கூடிய  நீண்ட வரிசை சமூக இடைவெளியோடு உருவாகின்றன .பிற்பகலுக்குள் அந்த  பொருள்கள் மனிதர்களாக உருவெடுத்து, டெல்லி அரசாங்கத்தால் வழங்கப்படும் மதிய உணவிற்காக  மணிக்கணக்கில் நிற்கின்றன.

கொரானா பரவாமல் தடுக்க போடப்பட்ட ஊரடங்கின் விளைவாக மக்கள் படும் அவதிகள் சொல்லி மாளாது .
டெல்லியில் ஒரு சாலையில் காலையில் பைகள், பாத்திரங்கள் , வாளிகளுடன் கூடிய  நீண்ட வரிசை சமூக இடைவெளியோடு உருவாகின்றன .பிற்பகலுக்குள் அந்த  பொருள்கள் மனிதர்களாக உருவெடுத்து, டெல்லி அரசாங்கத்தால் வழங்கப்படும் மதிய உணவிற்காக  மணிக்கணக்கில் நிற்கின்றன.

delhi-gives-food

வடமேற்கு டெல்லியில் உள்ள பட்லியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், 500 பேர் இலவச உணவுக்காக வரிசையில் நிற்கிறார்கள் .  இன்னொரு இடத்தில பருப்பு, அரிசி மற்றும் காய்கறிகளை வாங்க கொளுத்தும்  வெயிலில் பலர் காத்திருக்கிறார்கள் .
“சில நேரங்களில் நாங்கள் காலை  6 மணிக்கே  மதிய உணவுக்கு வருவோம்” என்று போக்குவரத்து நிறுத்தியதால் பாதிக்கப்பட்ட ஒரு ஆட்டோ டிரைவர் கூறுகிறார்.,
ஏழைகளுக்கு இலவச மதிய உணவு மற்றும் இரவு உணவை விநியோகிக்க டெல்லியில் 2,500 க்கும் மேற்பட்ட மையங்கள் உள்ளன. ஏப்ரல் 1 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் 10 லட்சம் பேர் உணவைப் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக தில்லி அரசு கூறுகிறது. ஆனால்  பலர் தினசரி உணவில்லாமல்   போவதாகத் தெரிகிறது.
“சில நேரங்களில், எங்கள் முறை வரும்போது உணவு முடிந்துவிடும்” என்று பலமணிநேரம் பசியோடு காத்திருந்த ஒரு நபர் கூறுகிறார்.அங்கு  சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக  யாராவது மிக நெருக்கமாக நிற்கிறார்களா என்பதைக் கண்காணிக்கிறார்கள்.