பல அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் ! மரண பயத்திலும் டிக்டாக் செய்த பெண்கள் ! 

பல அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் ! மரண பயத்திலும் டிக்டாக் செய்த பெண்கள் ! 

பள்ளத்தில் கார் கவிழ்ந்தும், உயிரை பற்றி கவலைப்படாமல் பெண்கள் டிக்டாக் வீடியோ எடுத்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குழந்தைக்கு பேர் வைக்கும் நிகழ்ச்சி முதல் பிண ஊர்வலம் வரை அனைத்து நிகழ்வுகளிலும் செல்பி எடுப்பதும், டிக்டாக் செய்வதும், அதை சமூக வலைதளங்களிலும் போட்டு லைக்குகள் அள்ளுவதும் சர்வ சாதாரண மாறிவிட்டது. 

car

அமெரிக்காவில் 2 பெண்கள் சென்ற கார் ஒன்று வளைவு பாதையில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் கார் பல்டி அடித்து சாலையோர பள்ளத்தில தலைகுப்புற கவிழ்ந்தது. ஆனாலும் இதில் பயணம் செய்த 2 பெண்கள் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்க அவர்களை மீட்பதற்க சிறிது நேரம் தேவைப்பட்டது. 
அந்த சமயத்தில் பயத்துடன் காரில் இருந்த அந்த 2 பெண்கள் கொஞ்சம் மனநிலையை ரிலாக்ஸ் செய்ய டிக் டாக் வீடியோ செய்தனர். பிறகு அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்த காரில் இருந்த பெண் கூறும்போது, ”போலீஸ் வரும் வரை காருக்குள்ளேயே இருந்தபோது என்ன செய்வதென தெரியவில்லை. பயத்திலும் பதட்டத்திலும் இருந்தோம். அந்த மனநிலையை மாற்றவும்.. அதிலிருந்து வெளிவரவுமே டிக்டாக் செய்தோம். அது எங்களுக்கு நல்ல பலன் தந்தது” என தெரிவித்தார்.