பல்நோக்கு மருத்துவமனை, கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றம்!

 

பல்நோக்கு மருத்துவமனை, கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றம்!

பல தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. 

இந்தியாவில் கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,500ஐ எட்டியுள்ள நிலையில்,  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால், அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப் படாததால் உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. 

ttn

இந்நிலையில் மதுரையில் உள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை சமீபத்தில் கட்டப்பட்டது என்பதாலும், அங்கு கொரோனா அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க 650 படுக்கைகளும், 150 ஐ.சி.யூ வார்டுகளும் இருப்பதால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது. மேலும், உயர் சிகிச்சை அளிக்க வென்டிலேட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இங்கு இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.