பலமான இலக்கா கேட்டு காங்கிரஸில் அடிதடி… மகாராஷ்டிரா அமைச்சரவையில் நீடிக்கும் இழுபறி!

பலமான இலக்கா கேட்டு காங்கிரஸில் அடிதடி… மகாராஷ்டிரா அமைச்சரவையில் நீடிக்கும் இழுபறி!

மகாராஷ்டிராவில் யாருக்கு எந்த இலாக்கா என்று ஒதுக்கப்பட முடியாத சூழல் நிலவ காங்கிரஸில் நிலவும் அமைச்சர் பதவி சண்டைதான் காரணம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
மகராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தது. யாருக்கு எத்தனை அமைச்சர் பதவி, என்ன என்ன இலக்கா யாருக்கு என்பது முன்னரே முடிவு செய்யப்பட்டுவிட்டது. இதன் அடிப்படையில் அமைச்சரவை விரிவாக்கம் நடந்தது. 

uddhave thckery

ஆனால், காங்கிரஸ் கட்சிக்குள் யாருக்கு என்ன இலாக்கா ஒதுக்குவது என்ற கோஷ்டி சண்டை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால், அமைச்சர்களுக்கான இலாக்கா ஒதுக்கீடு செய்வது தாமதாகி வருகிறது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் முடிவு செய்யப்பட்டுவிட்டன. ஆனால், காங்கிரஸ் தன்னுடைய பட்டியலை வழங்காததால் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.

throat

இதனால், மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாஹிப் தோராத், மூத்த தலைவர்கள் அசோக் சவான், விஜய் வடேட்வார் உள்ளிட்டவர்கள் கூடி பட்டியலை இறுதி செய்ய முடிவெடுத்தனர். ஆனாலும் பட்டியல் இறுதி செய்ய முடியாமல் மூத்த தலைவர்கள் திணறியதாக கூறப்படுகிறது. இவர்கள் பட்டியலை தயார் செய்து, கட்சித் தலைமை ஒப்புதல் பெற்று, அதன்பிறகு முதல்வர் உத்தவ் தாக்கரேயிடம் அளித்து, அவர் அதை கவர்னருக்கு அளித்து அதன்பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வேண்டும். இது எப்போது முடியும் என்று தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

chavan

ஏன் இந்த இழுபறி என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் கேட்ட போது, “சிவசேனா முதலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேசியது. அவர்கள் இருவரும் பேசி நல்ல துறைகளை எல்லாம் தங்களுக்கு என்று வைத்துக்கொண்டனர். காங்கிரஸ் கட்சிக்கு பலமில்லாத துறைகள் ஒதுக்கப்பட்டன. இதனால் வேறு துறைகளை அளிக்கும்படி சிவசேனா, தேசியவாத காங்கிரசிடம் கேட்டு வருகிறோம். ஆனால் அவர்கள் தர மறுக்கிறார்கள் இதுதான் இழுபறிக்கு காரணம்” என்றனர்.