பறந்துவந்த இந்தி தயாரிப்பாளர், இறங்கிப் போன‌ ராகவா லாரன்ஸ்!

பறந்துவந்த இந்தி தயாரிப்பாளர், இறங்கிப் போன‌ ராகவா லாரன்ஸ்!

பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருக்கும்போதே, திடீரென அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. தன் அனுமதி பெறாமல் அந்த போஸ்டரை வெளியிட்டதாகவும், சுயமரியாதைதான் முக்கியம் அதனால் ஹிந்தி ரீமேக்கிலிருந்து விலகுகிறேன் என ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.

சோறா சொரணையா என்றுவந்தால், சோறு பக்கமே தராசு கீழிறங்கும். சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. காஞ்சனா பேயை வைத்து தமிழில் நூற்றுக்கணக்கான கோடிகளை கல்லா கட்டியதைக்கண்ட பாலிவுட், அப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ராகவாவுக்கு அழைப்பு விடுத்தது. அக்சய்குமார் போன்ற சீனியர் நடிகர்கள் என காஸ்ட்டீங்கும் பக்காவாக ரெடியான நேரத்தில்தான், ராகவாவின் தன்மானத்துக்கு இழுக்கு வந்தது.

Raghava Lawrence

பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருக்கும்போதே, திடீரென அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. தன் அனுமதி பெறாமல் அந்த போஸ்டரை வெளியிட்டதாகவும், சுயமரியாதைதான் முக்கியம் அதனால் ஹிந்தி ரீமேக்கிலிருந்து விலகுகிறேன் என ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.
 
Laxmi Bomb Akshay
அவரது விலகல் முடிவு இந்தியத் திரையுலகில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பல ரசிகர்கள் மீண்டும் ராகவா லாரன்ஸ்தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். அவர்களது வேண்டுகோளை ஏற்ற ராகவா லாரன்ஸ்,தயாரிப்பு நிறுவனம் மீண்டும் பேச வருவதாகவும், தன் வேலைக்கு உரிய சுயமரியாதை கிடைத்தால் மீண்டும் படத்தை இயக்குவது பற்றி யோசிப்பேன் என்றும் ரசிகர்களுக்குத் தெரிவித்தார்.
 
மும்பையிலிருந்து சென்னை வந்து ராகவா லாரன்ஸை சந்தித்த தயாரிப்பு நிறுவனத்தினர் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதில் சுமுகமான முடிவு எட்டப்பட்டது. தயாரிப்பாளரே தன்னைத் தேடி வந்து பேசியதாலும், அக்சய் குமார் ரசிகர்கள், த‌ன் ரசிகர்கள் என பலரும் கேட்டுக் கொண்டதாலும் மீண்டும் காஞ்சனா ஹிந்தி ரீமேக்கான லட்சுமி பாம் படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்துள்ளார்.