’பர்த் டேக்கு வாழ்த்து சொல்லாம இப்போ எதுக்கு?’ கமலைக் கேள்வி கேட்கும் ரஜினி ரசிகர்கள்

 

’பர்த் டேக்கு வாழ்த்து சொல்லாம இப்போ எதுக்கு?’ கமலைக் கேள்வி கேட்கும் ரஜினி ரசிகர்கள்

1975 ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் நடித்த முதல் படம் ‘அபூர்வ ராகங்கள்’ வெளியான போதிலிருந்தே நட்பானார்கள் கமல்ஹாசனும் ரஜினி காந்தும். கிட்டத்தட்ட 45 ஆண்டுகால நட்பு.

இருவரும் இணைந்து நடித்த காலத்திலிருந்தே அவரின் ரசிகர்களுக்கு பிணக்கு இருந்தது. பிறகு இருவரும் இரு துருவ நட்சத்திரமாக ஜொளிக்கத் தொடங்கியதும், அவரின் ரசிகர்களுக்குள் மோதல் இன்னும் அதிகமானது.

’பர்த் டேக்கு வாழ்த்து சொல்லாம இப்போ எதுக்கு?’ கமலைக் கேள்வி கேட்கும் ரஜினி ரசிகர்கள்

ஆனால், கமல் மற்றும் ரஜினி இருவரும் தங்களின் நட்பை பொதுமேடைகளில் வெளிக்காட்டி ரசிகர்களை சமாதானமாக இருக்கச் சொல்லி வற்புறுத்துவார்கள். அந்தளவு நெருங்கிய நட்பு இருவருக்கிடையே.

எப்போதும் ஒருவருக்கொருவர் பிறந்த நாளின்போது வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வது இயல்பான பழக்கம். ஆனால், இந்த ஆண்டு ரஜினி காந்தின் பிறந்த நாள் போது கமல்ஹாசன் ட்விட்டரில் எந்த வாழ்த்துப் பதிவு பதிவிட வில்லை. அதனால், இருவருக்கும் இடையே ஏதோ பிளவு என்று பேசப்பட்டது.

’பர்த் டேக்கு வாழ்த்து சொல்லாம இப்போ எதுக்கு?’ கமலைக் கேள்வி கேட்கும் ரஜினி ரசிகர்கள்

தற்போது ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவரின் உடல்நிலையில் ரத்த அழுத்தம் மாறுபாடு இருப்பதால் மட்டுமே சிகிச்சையில் இருக்கிறார் என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், அண்ணாத்தே படப்பிடிப்பு குழுவில் 6 பேருக்கு கொரோனா எனும் செய்தி பலருக்கும் அச்சத்தை வரவழைத்தது.

இந்நிலையில் கமல்ஹாசன், ’நண்பர் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டு ரஜினிகாந்தை டேக் செய்திருந்தார்.

இந்தப் பதிவில் ரஜினி ரசிகர்கள் கமலிடம் பல கேள்விகளைக் கேட்டு வருகின்றனர்.

‘பிறந்த நாளுக்கு வராத அக்கறை இப்போ வருதோ” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

’பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல மாட்ட, ஆனா, இப்ப மட்டும் தூக்கிட்டு வந்திருவ?’ என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

’இதுக்கு மட்டும் கத்துதா அந்தப் பல்லி – தோழர் ரஜினி’ என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.

இப்படிப் பலர் பதிவிட்டாலும் சிலர், பிறந்த நாளுக்கு பதிவிட வில்லை என்றாலும் பரவாயில்லை. ஆபத்து சூழலில் ஆறுதலாகப் பதிவிட்டதற்கு நன்றி என்று பாராட்டியுள்ளார்கள்.