பர்கர் ஆர்டர் செய்து விட்டு வரிசையில் நின்ற பில்கேட்ஸ்: வியப்பை தரும் சம்பவம்!

 

பர்கர் ஆர்டர் செய்து விட்டு வரிசையில் நின்ற பில்கேட்ஸ்: வியப்பை தரும் சம்பவம்!

உலகின் மிகப்பெரிய பணக்காரரும்,  மைக்ரோசாப்ட் அதிபருமான பில்கேட்ஸ் சமீபத்தில் ஹோட்டலுக்கு சென்று பர்கர் ஆர்டர் செய்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன்: உலகின் மிகப்பெரிய பணக்காரரும்,  மைக்ரோசாப்ட் அதிபருமான பில்கேட்ஸ் சமீபத்தில் ஹோட்டலுக்கு சென்று பர்கர் ஆர்டர் செய்து விட்டு வரிசையில் நின்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ். அமெரிக்காவின்  சீட்டல் நகரில் உள்ள டிக்ஸ் ஹோட்டலுக்கு சமீபத்தில் வந்த பில்கேட்ஸ் பர்கர் ஆர்டர் செய்து விட்டு கடைக்கு வெளியே பேண்ட் பாக்கெட்டுக்குள் கை விட்டுக் கொண்டு அமைதியாக நின்று கொண்டிருந்தார். அவர் ஆர்டர் செய்த ஒரு பர்கர் விலை 3.40 டாலர். ஃப்ரைஸ் விலை 1.90 டாலர் மற்றும் கோக் 2.38 டாலர் மொத்தம் 7.68 பில் கொடுத்த பில்கேட்ஸ் . இது இந்திய ரூபாய் மதிப்பில், 547 ரூபாய் ஆகும்.

சீட்டல் நகரத்தின் அருகிலுள்ள  பெல்லிவ் பகுதி பர்கர்மாஸ்டர் கடைக்குச் சென்று பர்கர் சாப்பிடுவது பில்கேட்ஸின் வழக்கம். ஒரு மாற்றம் வேண்டுமென்பதற்காக  சீட்டலில் உள்ள டிக்ஸ் டிரைவ் இன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போதுதான், இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 

உலக மகா பணக்காரர்,  பர்கர் ஆர்டர் செய்து விட்டு சாமானிய மனிதர் போல காத்திருப்பதைப் பார்த்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் மைக் காலோஸ் என்பவர் புகைப்படம் எடுத்து, சமூகவலைதளத்தில், ‘பணக்காரர்கள் பில்கேட்ஸ் போன்று நடந்து கொள்ள வேண்டுமே தவிர வெள்ளை மாளிகையில் இருந்து கொண்டு தங்கக்கழிவறையுடன் போஸ் கொடுக்கக் கூடாது’ என்ற வாசகத்துடன் இந்தப் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இந்தப் புகைப்படமானது  13,000 முறை ஷேர் செய்யப்பட்டது. 17,000 பேர் லைக் செய்திருந்துள்ளனர்.

மிகப் பெரிய பணக்காரராக இருக்கலாம். உலகம் முழுக்க கொண்டாடப்படும் செலிபிரிட்டியாக இருந்தாலும் தனி மனித சுதந்திரம் மிக அவசியமானது என்ற பில்கேட்ஸின் வார்த்தையைப் பலரும் நினைவுபடுத்தி  வியந்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.