பரியேறும் பெருமாள் படத்தை குடும்பத்துடன் பார்த்த ஸ்டாலின்: ரஞ்சித்திடம் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

 

பரியேறும் பெருமாள் படத்தை குடும்பத்துடன் பார்த்த ஸ்டாலின்: ரஞ்சித்திடம் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

திரையரங்கில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தன் குடும்பத்துடன் சென்று பார்த்துள்ளார்.

சென்னை: திரையரங்கில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தன் குடும்பத்துடன் சென்று பார்த்துள்ளார்.

தமிழக அரசியலில் திமுகவிற்கும் அதன் தலைவர் ஸ்டாலினுக்கும் முக்கிய பங்கு இருப்பதாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் ரஞ்சித் தெரிவித்திருந்தார்.

தலித்திய அரசியல் பேசுபவராக அறியப்படும் ரஞ்சித்தின் இந்த பேச்சு, திமுகவின் கடந்த கால செயல்பாடுகளை பாராட்டும் விதமாகவே பார்க்கப்பட்டது. குறிப்பாக 1950 காலக்கட்டங்களில் தமிழகம் இருந்த நிலைக்கும், திராவிட இயக்கங்கள் அரசியல் பொறுப்பிற்கு வந்த பின் அது அடைந்துள்ள மாற்றத்திற்கும் பின்னால் பல தலைவர்களின் தியாக வரலாறு இருக்கிறது.

இந்நிலையில், ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தை ஸ்டாலின் தன் குடும்பத்துடன் சென்று பார்த்துள்ளார்.

கதிர், ஆனந்தி, யோகிபாபு போன்றோர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த ஸ்டாலின், “தலைவர் கலைஞர் பரியேறும் பெருமாளை பார்த்திருந்தால் கொண்டாடியிருப்பார்” என ரஞ்சித் மற்றும் படக்குழுவினரிடம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அப்போது, ஸ்டாலினுடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக நிர்வாகிகள் சிலர் உடனிருந்தனர்.