பரிசு பெட்டியுடன் கிளம்பிவிட்டார் மைக்கேல் ராயப்பன்

 

பரிசு பெட்டியுடன் கிளம்பிவிட்டார் மைக்கேல் ராயப்பன்

மைக்கேல் ராயப்பன் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். டிடிவி தினகரன் திடீர் என ஞான அருள்மணியை மாற்றி மைக்கேல் ராயப்பனை அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

டிடிவி தினகரனின் அமமுகவுக்கு பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். சின்னம் அறிவிக்கப்பட்ட உடனேயே திருநெல்வேலி மக்களவை தொகுதி வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் பிரசார வேலைகளை துவங்கிவிட்டார்.

மைக்கேல்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் பிரசார வேலைகளில் பிஸியாக உள்ளனர். புதிதாய் கட்சி துவங்கியவர்கள் தங்கள் கட்சியை மக்களிடம் நிறுவ விரைந்து செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் புதிதாய் கட்சி சின்னம் பெற்றவர்கள், தங்கள் சின்னத்தை மக்கள் மனதில் பதியவைக்க பிரசாரம் செய்து வருகிறார்கள்.

டிடிவி தினகரனின் அமமுகவுக்கு மட்டும் சின்னம் வழங்குவதில் பிரச்சனை நீடித்தது. தினகரன் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தின் மீது வழக்கு போட்டிருந்தார், அந்த வழக்கு முடியும்வரை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர் பயன்படுத்திய குக்கர் சின்னத்தை யாருக்கும் வழங்காமல் நிறுத்திவைக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் தினகரனுக்கு இரட்டை இலை கிடைக்கவில்லை. குக்கர் சின்னமும் வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் கேட்ட சின்னத்தை வழங்க இயலாது என்ற தேர்தல் ஆணைய அறிவிப்பை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அமமுகவுக்கு பொது சின்னம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி அமமுகவுக்கு பரிசுப் பெட்டி சின்னம் அறிவிக்கப்பட்டது.

பரிசு

பரிசுப் பெட்டி சின்னம் அறிவிக்கப்பட்ட உடனேயே திருநெல்வேலி மக்களவை தொகுதி வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் பிரசார வேலைகளை துவங்கிவிட்டார். ஞான அருள்மணி என்பவருக்கு பதிலாக திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராய் மைக்கேல் ராயப்பன் போட்டியிடுவார் என சில நாட்களுக்கு முன்தான் டிடிவி தினகரனால் அறிவிக்கப்பட்டது.

மைக்கேல்

மைக்கேல் ராயப்பன் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். டிடிவி தினகரன் திடீர் என ஞான அருள்மணியை மாற்றி மைக்கேல் ராயப்பனை அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சின்னம் அறிவிக்கப்பட்டதும், மைக்கேல் ராயப்பன் செயல்படுவதை பார்த்து மற்ற கட்சியினர் வாயடைத்து போயிருக்கிறார்களாம்!..

 

இதையும் வாசிக்க: சூடு பிடிக்கும் தேர்தல் களம்: டிசர்ட்டில் அழகிரி, ஆனாலும் ஸ்டாலினுடன் செல்பி எடுத்த இளைஞர்; வைரல் போட்டோ!