பரவும் கொரோனா வைரஸால் கைதிகளுக்கு கொண்டாட்டம்! சிறையிலிருந்து விடுவிப்பு!!

 

பரவும் கொரோனா வைரஸால் கைதிகளுக்கு கொண்டாட்டம்! சிறையிலிருந்து விடுவிப்பு!!

கொரோனா வைரஸ் அச்சம் எதிரொலியாக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மாநிலம் முழுவதும் உள்ள சிறைக்கைதிகள் சொந்த இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட சிறையில் உள்ள கைதிகளை சொந்த இடைக்கால ஜாமீனில் விடுவிக்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட சிறையில் உள்ள 11 கைதிகள் சொந்த இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக உச்சநீதிமன்ற உத்தரவுபடி, வேலூர் மத்திய சிறை உட்பட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட கிளை சிறைகளில் உள்ள மொத்தம் 126 விசாரணை கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆண்டிபட்டி, உத்தமபாளையம், பெரியகுளம் ஆகிய கிளை சிறையில் இருந்து 21 கைதிகள் ஜாமினில் விடுதலை செய்யபட்டனர். 

சிறை

திருத்துறைப்பூண்டி கிளை சிறையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 கைதிகள் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு உத்தரவுப்படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி என நான்கு மாவட்டங்களில் உள்ள விசாரணை கைதிகள் மொத்தம் 157 பேர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர் .

கொரோனா வைரஸ்  தொற்று அச்சம் காரணமாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து நேற்று மற்றும் இன்று என 64 விசாரணை கைதிகள் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் இன்று விடுதலை செய்யப்படலாம் என தெரிகிறது, இதேபோல் திருவாரூர், நன்னிலம் கிளை சிறைகளில் இருந்த 22  கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். திருவாரூரில் உள்ள பெண்களுக்கான கிளை சிறையில் சிறிய தண்டனைகள் பெற்று கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த 11 பெண்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல் நன்னிலம் ஆண்கள் கிளை சிறையில் இருந்த பதினோரு பேரும் கோவை மத்திய சிறையில் இருந்த 136 கைதிகளும் நள்ளிரவில் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.