பரமக்குடி ‘பொன்னையா மெஸ்’ ராமநாதபுரம் போனால் மிஸ் பண்ணிடாதீங்க..

 

பரமக்குடி ‘பொன்னையா மெஸ்’ ராமநாதபுரம் போனால் மிஸ் பண்ணிடாதீங்க..

பரமக்குடி என்றால் உங்களுக்கு கமலஹாசன் மட்டும் நினைவு வந்தால் நீங்கள் உலகம் தெரியாத ஆள் என்று அர்த்தம்.

பரமக்குடி என்றால் உங்களுக்கு கமலஹாசன் மட்டும் நினைவு வந்தால் நீங்கள் உலகம் தெரியாத ஆள் என்று அர்த்தம்.கமலஹாசன் சினிமாவில் ஹீரோவான அதே 70களின் இறுதியில் பரமக்குடியில் பிறந்ததுதான் பொன்னையா மெஸ்.

Ponnaiya mess

பரமக்குடி அஞ்சுமுக்கில் முதல் கிளை துவங்கி,அப்படியே கலக்டர் ஆஃபிஸ் ரோடு,எல்.ஐ.சி அருகே என்று கிளைபரப்பி இப்போது மாவட்டத்தலை நகரான இராமநாதபுரத்தில் நான்காவது கிளையை துவங்கி இருக்கிறார்கள்.ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் போகும் சாலையில் பட்டிணம் காத்தானில் இருக்கிறது பொன்னையா மெஸ்ஸின் புதியகிளை.

செட்டிட்டுக்கு அருகிலேயே இருந்தாலும் ,ராமநாதபுரத்துக்கென்று ஒரு தனிச்சுவை உண்டு.இவர்கள் தரும் அயிரை மீன் குழம்பும் இறால் தொக்கும் அதற்கு சாட்சியம் சொல்கின்றன.மதிய உணவின் போது எதை மறந்தாலும் இவர்கள் தரும் எலும்பு ரஸத்தை மிஸ்பண்ணி விடாதீர்கள்இவர்களிடம் நீங்கள் வேறு எங்கும் பார்க்க முடியாத இரண்டு சிறப்புத் தயாரிப்புகள் உண்டு.ஒன்று நாட்டுக்கோழி,இடியாப்பம் செட்.இன்னொன்று சிக்கன் ரோஸ்ட் பிரியாணி!

food

நாட்டுக்கோழியின் திக்கான கிரேவியுடன் இடியாப்பம் தருகிறார்கள். இடியாப்பத்தை எடுத்து கிரேவியில் முக்கி வாயில் போட்டால் சொர்க்கம் பக்கத்தில்.பிரியாணி சாப்பிட ஆசை,ஆனால் எலும்பைக் கடித்து,கறியை குதறி,அதுவும் பொது இடத்தில் இப்படி அராஜகம் செய்யலாமா என்று யோசிக்கும் ஜெண்டில் மேனா நீங்கள்? உங்களுக்காகத்தான் ரோஸ்ட் பிரியாணி.
ரோஸ்ட் செய்த சிக்கனை எலும்பில் இருந்து பிரித்து பிரியாணியில் வைத்து தருகிறார்கள்.

NV

அடுத்து,இங்கே தரப்படும் மட்டன் தோசை,இறால் தோசையும் மாலை நேர உணவில் ஹீரோவாக இருக்கின்றன.கூடவே பஞ்சு போன்ற புரோட்டாவும் இட்லியும் உண்டு.விலை,ராமநாதபுரத்துக்கு கொஞ்சம் அதிகம்தான். சாப்பாடு 80 ரூபாய்.மற்ற சைட் டிஷ்களில் விலை உயர்ந்த ஐட்டம் என்றால் அது மட்டன் போன்லெஸ்தான்.பிளேட் 180 ரூபாய்.

food

இதெல்லாம் , விலைப்பட்டியலைப் பார்க்கும் போதுதான்.ருசித்துப் பார்த்தால் முகம் சுளிக்காமல் காசைக் கொடுத்து விடுவீர்கள்.
கடைசியாக ஒரு இனிப்பான செய்தி,இங்கே,’ பஞ்சாபி பாயசம்’ என்கிற ஒரு பானம் தருகிறார்கள். ரெசிப்பி கேட்டால் முறைக்கிறார்கள்.மறக்காமல் கேட்டு வாங்கி சாப்பிடுங்கள்.