பயந்துபோன முதல்வர்; டெல்டா மாவட்டங்களை ஹெலிகாப்டரில் பார்வையிட முடிவு?

 

பயந்துபோன முதல்வர்; டெல்டா மாவட்டங்களை ஹெலிகாப்டரில் பார்வையிட முடிவு?

புயல் பாதித்த மாவட்டங்களுக்கு செல்லும் அமைச்சர்களுக்கு வலுக்கும் எதிர்ப்பால் முதல்வர் பழனிசாமி ஹெலிகாப்டரில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்வையிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: புயல் பாதித்த மாவட்டங்களுக்கு செல்லும் அமைச்சர்களுக்கு வலுக்கும் எதிர்ப்பால் முதல்வர் பழனிசாமி ஹெலிகாப்டரில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்வையிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கஜா புயல் கரையை கடந்து டெல்டா மாவட்டங்களை நிலைகுலைய செய்துள்ளது. அங்கு உணவு, தண்ணீர், மின்சாரம், வீடு என அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். சோறுடைத்த சோழ நாடு என போற்றப்பட்ட டெல்டா மாவட்டங்கள் தற்போது சோற்றுக்கு வழி இல்லாமல் இருக்கிறது. இதனையடுத்து தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

eps

ஆனால் அரசு தரப்பில் இருந்து எந்தவித நிவாரண உதவியும் வழங்கவில்லை எனவும், அரசு அதிகாரிகள் எட்டிக்கூட பார்க்கவில்லை எனவும் டெல்டா மாவட்ட மக்கள் குற்றம்சாட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு செல்லும் அமைச்சர்களை மக்கள் முற்றுகையிட்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் நல்ல பெயர் வாங்கிய தமிழக அரசு நிவாரண பணிகளில் அதை கோட்டைவிட்டது. 

palani

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை நாளை பார்வையிட இருக்கிறார். ஆனால் அமைச்சர்களுக்கு டெல்டா மாவட்டங்களில் வலுக்கும் எதிர்ப்பு முதல்வர் பழனிசாமியை பீதியடைய வைத்துள்ளதாம். புயல் கரையை கடந்ததும் பார்வையிட சென்ற அமைச்சர்களுக்கே இந்த நிலைமை என்றால், தாமதமாக பார்வையிட செல்ல இருக்கும் தமக்கு இதைவிட எதிர்ப்பு பயங்கரமாக இருக்கும் என முதல்வர் நினைப்பதால் தரைவழியில் சென்று  பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்வையிடாமல் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட அவர் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.