பன்முகத்திறன் கொண்டவர் கருணாநிதி: பேரவையில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் புகழாரம்

 

பன்முகத்திறன் கொண்டவர் கருணாநிதி: பேரவையில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் புகழாரம்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

 தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆளுநர் உரை நிறைவடைந்ததையடுத்து, கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்க, தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை வருகிற 8-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கியதும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேர், நெல் ஜெயராமன் மற்றும் கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் குறிப்பு வாசித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அண்ணாவின் அன்புத் தம்பி கலைஞர். எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர் என பன்முகத்திறன் கொண்டவர் கருணாநிதி. அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் எவரும் இல்லை என புகழாரம் சூடினார்.

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியை துணை முதல்வர் ஓபிஸ் சட்டப்பேரவையில் புகழ்ந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.