பந்தாடப்பட்ட திமுகவின் அரசியல் வியூகம்… நொண்டிக்குதிரையான பந்தயக் குதிரை..!

 

பந்தாடப்பட்ட திமுகவின் அரசியல் வியூகம்… நொண்டிக்குதிரையான பந்தயக் குதிரை..!

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று திமுக தலைவரின் முதல்வர் கனவை நிறைவேற்ற அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் அவருக்கு எதிராக அமைந்து விடுகிறது.

தற்போதைய  அரசியல்வாதிகள் பேசுவதை பெரும்பாலான மக்கள் நம்புவது இல்லை. அதே நேரத்தில் நடுநிலை என்ற பெயரில் ஊடகங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை ஓரளவு மக்கள் நம்பி வருகின்றனர். அந்த வகையில் பெரும்பாலான பிரபல ஊடகங்களின் உதவியுடன் அரசியல்வாதிகள் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

stalin

இதேபோல முயற்சி செய்யும் அரசியல்வாதிகளையும், பிரபலங்களையும் இணைக்கும் பணியை தான் சமீப காலங்களில் அரசியல் ஆலோசனை என்ற பெயரில் பிரசாரம் செய்து வருகிறது. இதற்கு முன்பாக பிரதமர் மோடி நிதீஷ் குமார் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோருக்கு பிரஷாந்த் கிஷோர் வெற்றிகளை வகுத்துக் கொடுத்துள்ளார். இதனால், தமிழக அரசியல் கட்சிகளும் அவரின் உதவியை நாடிச் சென்றனர். அந்த வகையில் குறிப்பாக நடிகர் கமலஹாசன் மற்றும் அதிமுக தரப்பு இவரைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சித்து வந்தனர்.

 இந்த நிலையில் மற்ற கட்சிகள் அனைத்தும் பின்வாங்கியது. இதையடுத்து திமுகவுடன் பிரஷாந்த் கிஷோர் இணைந்து செயல்படுவார் என்பது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்- பிரசாந்த் கிஷோருடன் இணைந்து பணியாற்றுவார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார் ஸ்டாலினின்.

prashanth

 இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் கடும் விவாதத்தைக் கிளப்பியது. அதிமுக கூட்டணி கட்சிகளான பாமக மற்றும் பாஜகவினர் இணைந்து திமுகவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் அவருடன் ரஜினி ரசிகர்களும் இணைந்து கொண்டு திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது வருகிற 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று திமுக தலைவரின் முதல்வர் கனவை நிறைவேற்ற அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் அவருக்கு எதிராக அமைந்து விடுகிறது. அந்த வகையில் தற்போதைய இந்த முயற்சியையும் அவருக்கு எதிராக திமுக பாமக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் முறியடிக்கக் கிளம்பி உள்ளன.