பத்ரிநாத் கோவில் வாயில்கள் திறப்பு – 27 பேருக்கு மட்டும் அனுமதி, பக்தர்களுக்கு இல்லை

 

பத்ரிநாத் கோவில் வாயில்கள் திறப்பு – 27 பேருக்கு மட்டும் அனுமதி, பக்தர்களுக்கு இல்லை

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலின் வாயில்கள் இன்று அதிகாலை 4:30 மணிக்கு திறக்கப்பட்டன.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலின் வாயில்கள் இன்று அதிகாலை 4:30 மணிக்கு திறக்கப்பட்டன. தலைமை பூசாரி உட்பட 27 பேர் மட்டுமே கோவிலில் அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை.

பக்தர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். கொரோனா தொற்றுநோய் காரணமாக மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று ஜோஷிமத்தின் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் அனில் சானியல் கூறினார். உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கடந்த மாதம் பேசுகையில் பத்ரிநாத் சன்னதி திறக்கப்படும் என்று கூறியிருந்தார்.

ttn

முன்னதாக கடந்த ஏப்ரல் 29 அன்று, ஆறு மாத குளிர்கால இடைவேளைக்குப் பிறகு கேதார்நாத் கோவிலின் வாயில்கள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஊரடங்கு காரணமாக இந்தக் கோவிலிலும் நுழைய எந்த பக்தர்களும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஏப்ரல் 29 ஆம் தேதி கேதார்நாத் சன்னதி திறக்கப்படுவதற்கு முன்பு வருடாந்திர பஞ்சமுகி டோலி யாத்திரை (ஊர்வலம்) பக்தர்கள் இல்லாமல் நடந்தது.