பத்திரிகையாளர்களை பொறுக்கிகள் என்ற எஸ்.வி.சேகர்! – ரஜினியையும் விமர்சித்தார்

 

பத்திரிகையாளர்களை பொறுக்கிகள் என்ற எஸ்.வி.சேகர்! – ரஜினியையும் விமர்சித்தார்

சென்னையில் நிருபர்களிடம் பேசிய ரஜினிகாந்த் முதல்வர் பதவியை ஏற்க மாட்டேன், வருங்கால முதல்வர் என்று சொல்வதை நிறுத்துங்கள். மக்களிடம் மாற்றத்துக்கான எழுச்சி ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன் என்று கூறினார்.

பத்திரிகையாளர்களை மீண்டும் பொறுக்கிகள் என்று நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார். ரஜினியை விமர்சித்திருப்பது ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

rajinikanth

சென்னையில் நிருபர்களிடம் பேசிய ரஜினிகாந்த் முதல்வர் பதவியை ஏற்க மாட்டேன், வருங்கால முதல்வர் என்று சொல்வதை நிறுத்துங்கள். மக்களிடம் மாற்றத்துக்கான எழுச்சி ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன் என்று கூறினார். இதனால், மீண்டும் அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க-வைச் சேர்ந்தவரும், நகைச்சுவை நடிகருமான எஸ்.வி.சேகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
“கட்சி நடத்த பணமும் ஆட்சி நடத்த ராஜதந்திரமும் தைரியமும் தேவை. ஆகவே ரஜினி சொல்வது நிஜத்தில் நடக்காது. புரட்சி இந்தியாவில் வெடிக்காது புஸ்வாணமாகிவிடும்.  கட்சி ஆட்சி இருவர் கையில் இருந்தால் முதலில் சின்னம் முடங்கும்.  இதுவே வரலாறு” என்று கூறியுள்ளார்.

 

நியூஸ் 18 குணசேகரன் வெளியிட்டிருந்த ஒரு செய்தியை ரீட்வீட் செய்து, “நாமதான் நாலாவது தூணுன்னு சொல்லிகிட்டே பொறுக்கிங்களை விட்டு கல் எறிஞ்சு கலாட்டா பண்ணச்சொன்னவன் ஊர் பஞ்சாயதுக்கு கிளம்பினான் நீதி சொல்ல.  இது எப்டி இருக்கு” என்று குறிப்பிட்டுள்ளார். 

 

;ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களைக் கூறி வந்தவர் எஸ்.வி.சேகர். நேற்றைய பேட்டிக்குப் பிறகு ரஜினிக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். ரஜினி பா.ஜ.க-வில் இணைய வேண்டும் என்று பொன் ராதாகிருஷ்ணன் அட்வைஸ் செய்த நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் ரஜினியை விமர்சித்திருப்பது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.வி.சேகருக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.