பத்திரப்பதிவுக்கு சிடி வழங்கும் கட்டணம் ரூ.100 ஆக உயர்வு !

 

பத்திரப்பதிவுக்கு சிடி வழங்கும் கட்டணம் ரூ.100 ஆக உயர்வு !

பத்திரப்பதிவு செய்வதை வெப் கேமரா மூலம் பதிவு செய்து அதனை சிடி வடிவில் வழங்கும் நடைமுறை 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பத்திரப்பதிவு செய்வதை வெப் கேமரா மூலம் பதிவு செய்து அதனை சிடி வடிவில் வழங்கும் நடைமுறை 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதற்கு கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்தது. இதற்காக நியமிக்கப்பட்ட ஒரு தனியார் நிறுவனம் சிடி வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. சமீபத்தில் பத்திர பதிவைப் படம் பிடிக்கும் நிறுவனம் ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்காததால், ஊழியர்கள் பணியில் இருந்து விலகிய நிலையில் இந்த சிடி வழங்கும் திட்டம் முடங்கியது. ஆனால், அதற்கான கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

ttn

 

அதன் பின்னர், சிடி வழங்கும் பணிக்கு ‘எல்காட்’ நிறுவனம் மூலம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது குறித்து பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ ஒவ்வொரு பத்திர பதிவுக்கும் சிடி வழங்க ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. அதற்கான நிறுவனம் மாற்ற பட்டுள்ளதால் சிடிக்கான கட்டணம் ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் இந்த புதிய கட்டணத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும் இன்று முதல் இது அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.