பதட்டத்தில் இம்ரான்கான்! மீண்டும் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி !?

 

பதட்டத்தில் இம்ரான்கான்! மீண்டும் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி !?

இப்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் துபாயில் தஞ்சம் புகுந்திருக்கிறார் முன்னால் பாகிஸ்தான் அதிபர் முஷ்ரஃப்.அவருக்கு பெஷாவர் நீதிமன்றம் தேசத்துரோக வழக்கில் மரணதண்டனை விதித்தது பாக்கிஸ்தானில் பதட்டதை ஏற்படுத்தி இருக்கிறது. 

Musharaf

குறிப்பாக பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர்,மேஜர் ஜெனரல் ஆசிக் கபூர் அதை வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார்.’ முன்னாள்  ராணுவத் தலைவர்,முப்படைத் தளபதி, நாட்டின் அதிபர் என்று 40 ஆண்டுகள் நாட்டுக்கு சேவை செய்தவர் முஷாரப். அவர் தேசத்துரோகியாக இருக்க முடியாது. இந்த தீர்ப்பு சட்டப்படி எடுக்கப்படாமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு. பாகிஸ்தான் அரசியல் சாசனப்படிதான் நீதி வழங்கப்பட வேண்டும் என்று ராணுவம் விரும்புகிறது என்கிற அவரது பேச்சில் ஒரு தெளிவான செய்தி இருக்கிறது.

அதாவது எங்களுக்குப் பிடிக்காததைச் செய்ய வேண்டாம் என்று ஆட்சித் தலைமைக்கும் , நீதித் துறைக்கும் ராணுவம் விடுக்கும் மறைமுக எச்சரிக்கையாகவே இது பாகிஸ்தானில் பார்க்கப்படுகிறது.பெஷாவர் கோர்ட் தீர்ப்பு வழங்கபட்ட போது ஜெனீவாவில் இருந்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான். அவர் சார்பாக கருத்துக் கூறிய பிரதமர் இம்ரான்கானின் உதவியாளர் பிர்தோஷ் ஆசிக் அவான் ‘ ராணுவத்தின் கருத்தை தெரிந்து கொண்டபின் இது பற்றி விரிவான அறிக்கை அளிக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்.

Peshawar Court

பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரல் அன்வர் மன்சூர் ‘ இந்தத் தீர்ப்பு நியாயமற்றது, நாங்கள் மேல் முறையீடு செய்யப் போகிறோம் ‘ என்று பிரதமர் நாடு திரும்பும் முன்பே சொல்லிவிட்டார்.நாடு திரும்பிய இம்ரான்கான் தனது ‘தெரிக் – இ- இன்சாப் கட்சித்தலைவர்களை கூட்டி ஆலோசித்து கொண்டு இருக்கிறார். உள்ளூர் தொலைக் காட்சிகளும்,யூட்யூப் சானல்களும் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது முஷாரப் மீது தொடரப்பட்டு உள்ள தேசத்துரோக வழக்கை ஞாயப்படுத்தி இம்ரான்கான் பேசிய பழைய உரைகளைத் தேடித்தேடிப் போட்டுக் கொண்டு இருக்கின்றன. அடுத்த சில நாட்களில் பாகிஸ்தான் நாட்டில் எதுவும் நிகழலாம்.