பண மோசடி… திருச்சி தொழிலதிபரை கொன்று எரித்த பயங்கரம்!

 

பண மோசடி… திருச்சி தொழிலதிபரை கொன்று எரித்த பயங்கரம்!

வாங்கிய கடனை திரும்பி செலுத்ததாத கோபத்தில் திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம் தச்சங்குறிச்சி வனப் பகுதியில் கார் ஒன்று எரிந்த நிலையில் இருப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. சிறுகனூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியபோது, காருக்குள் ஒரு சடலம் எரிந்த நிலையில் உருக்குலைந்து இருந்தது. காலில் பெண்கள் அணியும் காலணி இருந்தது.

வாங்கிய கடனை திரும்பி செலுத்ததாத கோபத்தில் திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம் தச்சங்குறிச்சி வனப் பகுதியில் கார் ஒன்று எரிந்த நிலையில் இருப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. சிறுகனூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியபோது, காருக்குள் ஒரு சடலம் எரிந்த நிலையில் உருக்குலைந்து இருந்தது. காலில் பெண்கள் அணியும் காலணி இருந்தது. இதனால், யாராவது பெண்ணை கடத்தி வந்து பாலியல்வன்முறை செய்து கொலை செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் வந்தது. உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
காரின் நம்பர் பிளேட் கழற்றப்பட்டு இருந்தது. இதனால் யாருடைய வாகனம் அது என்று கண்டறிய முடியவில்லை. கார் இன்ஜின் நம்பரை வைத்து அது யாருடைய கார் என்று போலீசார் தேடினர்.

jakeer hussain

அப்போது அது திருச்சி அரியமங்கலத்தை அடுத்த காட்டூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஜாகீர் உசேனுக்கு சொந்தமான கார் என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். ஜாகீர் உசேனைத் தேடியபோது, அவர் சென்னை சென்றுள்ளதாக அவருடைய மகன் அக்ரம் உசேன் கூறியுள்ளார். சென்னை மற்றும் திருச்சியில் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதால் அடிக்கடி அவர் வெளியூர் செல்வது வழக்கம் என்றும் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து ஜாகீர் உசேன் எண்ணைத் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால், அழைப்பு செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவருடைய செல்போன் எண்ணின் அழைப்புகளைப் பரிசோதனை செய்தனர். அப்போது, கடைசியாக அவர் பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தை அடுத்த குன்னுமேடு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருடன் பேசியது தெரியவந்து. உடனே, அவரை அள்ளிக்கொண்டுவந்து விசாரணையைத் தொடங்கினர் போலீசார். அதே நேரத்தில், பிரேத பரிசோதனையில் இறந்தது பெண் இல்லை ஆண் என்று தெரியவந்தது.
போலீசார் தங்கள் ஸ்டைல் விசாரணையைத் தொடங்கியதும் சரவணன் உண்மையை சொல்ல ஆரம்பித்தார். “நானும் ஜாகீர் உசேனும் ஒன்றாக ரியல் எஸ்டேட், கார் பிசினஸ் செய்து வந்தோம். அவருக்கு பல லட்சம் கடனாகக் கொடுத்துள்ளேன். பணத்தைத் திருப்பித்தராத ஜாகீர் உசேன், திருப்பிக் கேட்ட என் மீதே போலீசில் புகார் அளித்தார். அதனால், அவரை கொலை செய்யத் திட்டமிட்டேன். என்னுடைய நண்பர்கள் மணிகண்டன், சக்திவேலிடம் நடந்த விஷயங்களைச் சொல்லி, கொலை செய்ய உள்ளதாக கூறினேன். அவர்களும் என் பக்கம் நியாயம் இருப்பதால் உதவுவதாக ஒப்புக்கொண்டனர்.

body

இதன்படி, ஜாகீர் உசேனுக்கு போன் போட்டு பேசினேன். அவர் நான் சென்னையில் உள்ளேன். 12ம் தேதி திருச்சி செல்ல உள்ளேன். அப்போது சந்திக்கலாம் என்றார். 12ம் தேதி வந்த அவரை கடலூர் மாவட்டம் ராமநத்தம் பகுதிக்கு வரவழைத்தோம். அவரிடம் பேசிப் பார்த்தோம். அவர் பணத்தைத் தர முடியாது என்று உறுதியாக நின்றார். இதனால் அவரை தீர்த்துக்கட்டினோம். பிறகு, உடலை திருச்சி மாவட்டம் தச்சங்குறிச்சி வனப்பகுதிக்கு அவருடைய காரிலேயே கொண்டுவந்தோம். 
கொலை செய்யப்பட்டது தெரியக்கூடாது என்பதற்காக, காரின் நம்பர் பிளேட்டை கழற்றினோம். உள்ளே பெண்ணின் செருப்பை அணிவித்து, பெட்ரோல் ஊற்றி எரித்தோம். எங்களைக் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்து நிம்மதியாகத் தூங்கினோம். ஆனால், செல்போன் உரையாடலை வைத்து போலீசார் பிடித்துவிட்டனர்” என்றார்.
திருச்சி மாவட்டம் வனப் பகுதியில் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போல தொழிலதிபர் அவருடைய கார் ஓட்டுநருடன் சேர்த்து எரித்துக் கொல்லப்பட்டார். இந்த ஆண்டு தொடக்கத்தில் காதலியுடன் பேசிக்கொண்டிருந்த காதலன் கொல்லப்பட்டார். காதலியை பாலியல் வன்முறை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த சில மாதங்களில் பெண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுபோன்ற குற்ற சம்பவங்களைத் தடுக்க போலீசார் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.