பணமதிப்பிழப்பால் வீடுகளில் விலை குறைந்துள்ளது: பிரதமர் மோடி பேச்சு!

 

பணமதிப்பிழப்பால் வீடுகளில் விலை குறைந்துள்ளது: பிரதமர் மோடி பேச்சு!

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வீடுகளின் விலை குறைந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சூரத்: பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வீடுகளின் விலை குறைந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டில் கறுப்புப்பணம், ஊழல், கள்ளநோட்டு ஆகியவற்றை ஒழிக்கிறேன் என்று கூறி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் பிரதமர் மோடி அறிவித்தார் .அதில் பெரும்பாலும் புழக்கத்தில் இருந்த  ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது மத்திய அரசு. இதனால்  மக்கள் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்தனர். 

இந்நிலையில் சூரத் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பேசினார். அதில், ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வீடுகளின் விலை குறைந்துள்ளது.பொதுவாகவே பலரும் கருப்புப் பணங்களை ரியல் எஸ்டேட் துறையில் பயன்படுத்தி வந்தனர். ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அதற்கு செக் வைத்தது. இதன் காரணமாக தற்போது வீடுகளின் விலை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் இளைஞர்கள் மலிவு விலையில் வீடு வாங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது’ என்றார்.