பட்டாம்பூச்சியைப் போல சிறகசைத்து பறப்போம்

 

பட்டாம்பூச்சியைப் போல சிறகசைத்து பறப்போம்

உங்க எல்லாருக்குமே பட்டாம்பூச்சியை ரொம்ப பிடிக்கும் தானே? வண்ண வண்ண நிறங்களில் துள்ளி துள்ளி தாழப் பறக்கும் பட்டாம்பூச்சியின் அழகு அத்தனை வசீகரமானவை.  அப்படி ஒரு பட்டாம்பூச்சியின் மூலம் வாழ்க்கைப் பாடம் ஒன்றை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். ஒரு மலை கிராமத்தில் துறவி ஒருவர் இருந்தார்.

உங்க எல்லாருக்குமே பட்டாம்பூச்சியை ரொம்ப பிடிக்கும் தானே? வண்ண வண்ண நிறங்களில் துள்ளி துள்ளி தாழப் பறக்கும் பட்டாம்பூச்சியின் அழகு அத்தனை வசீகரமானவை.  அப்படி ஒரு பட்டாம்பூச்சியின் மூலம் வாழ்க்கைப் பாடம் ஒன்றை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். ஒரு மலை கிராமத்தில் துறவி ஒருவர் இருந்தார். கூடியிருக்கும் மக்களுக்கு உள்ளதை உள்ளபடியே சொல்லி அனைவரையும் ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருந்தார். அவருடைய புகழ் நாளுக்கு நாள் சுற்றியிருக்கிற எல்லா கிரமாங்களையும் சென்றடைந்தது.

thuravi

தினமும் அவரைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது. பக்கத்து கிராமங்களிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் மக்கள் வந்த வண்ணமாக இருந்தனர். அவர்களது குறைகளைக் கேட்டறிந்து, அவர் சொல்கிற தீர்வுக்கும், மனதில் நினைக்கும் விஷயத்தை அவர் எடுத்துச் சொல்வதையும் கண்டு வியந்து சென்றனர். துறவியின் புகழ் பரவும் வேகத்தைப் பார்த்து, அதே கிராமத்தில் பொறாமைப் பிடித்த ஒருவன் இருந்தான். இந்தத் துறவியை சோதித்து, மக்கள் முன்னிலையில் அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்து ஒரு செயலைச் செய்ய முற்பட்டான்.
திட்டமிட்டது படியே, ஒரு நாள் மக்கள் கூடியிருந்த நேரத்தில், துறவியின் எதிரே சென்றான். ஒரு பட்டாம்பூச்சியைப் பிடித்து, தன் கைகளுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு, ‘என் கைகளில் ஒரு பட்டாம்பூச்சி இருக்கிறது. அது இப்பொழுது உயிரோடு இருக்கிறதா அல்லது இறந்து போய் இருக்கிறதா? உங்களால் சரியாகச் சொல்ல முடியுமா?’  என்று அந்தத் துறவியிடம் கேட்டான்.
ஒருவேளை துறவி, ‘அந்தப் பட்டாம்பூச்சி உயிரோடு இருக்கிறது’ எனச் சொன்னால், அந்தப் பட்டாம்பூச்சியை, மூடி வைத்திருக்கும் கைக்குள்ளேயே நசுக்கிவிட்டு, ‘இறந்து போய் இருக்கிறது’ என்றுச் சொல்வோம். ‘இறந்து போய்விட்டது’ எனச் சொன்னால், கைக்குள் இருக்கும் பட்டாம்பூச்சியைப் பறக்க விடுவோம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். 
முக்காலத்தையும் உணர்ந்து, மக்களின் பிரச்சினைகளையும், அதற்கான காரணங்களையும் சொல்லிக் கொண்டிருந்த துறவிக்கு அவனது சூழ்ச்சி புரிந்தது. அவனது கேள்விக்கு பொறுமையாக, ‘அன்பரே… அந்தப் பட்டாம்பூச்சி வாழ்வதும் சாவதும் உங்களின் கைகளில் தான் உள்ளது என்று சொன்னார். அந்தப் பொறாமைக்காரனுக்கு ஒன்றும் புரியவில்லை.
‘இது எப்படி பதிலாகும்?’ என்று கேட்டன். 

life

‘அந்தப் பட்டாம்பூச்சியை உங்கள் உள்ளங்கையோடு அமுக்கிப் பிடித்தால் இறந்துவிடும். அதே சமயம், அதற்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல், உங்களது கைகளைத் திறந்து விட்டால், சந்தோஷமாக உயிர் பிழைத்துப் பறந்துவிடும்’ என்று சொன்னார்.
தான் துறவியைச் சோதனை செய்ய நினைத்தது, துறவிக்குத் தெரிந்ததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தான் பொறாமைக்காரன். துறவியும் அவனது  செயலை எண்ணி சிரித்தபடியே அமர்ந்திருந்தார். நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அந்த பட்டாம்பூச்சியைப் போன்றது தான். துன்பம்,  கவலை, வறுமை,இயலாமை என அத்தனை வாழ்வியல் சங்கதிகளையும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டே,  வாழ்க்கையோடு பயணித்தோம் எனில் அற்புதமான அந்த வாழ்க்கையும் கவலைகளோடு இறந்து போய்விடும். அத்தனைத் துயரங்களையும் உதறித் தள்ளிவிட்டு மீண்டு வந்தோமானால், அழகான பட்டாம் பூச்சியைப் போல் வாழ்க்கையும் அழகான வண்ணங்களோடு காண்பதற்கு குளிர்ச்சியாக சந்தோஷமாக சிறகடித்துப் பறந்து ஒளிரும். 
துயரங்களை இறுக்கமாகப் பிடித்து இறந்து போகாமல் தூர எறிந்து பட்டாம் பூச்சியைப் போல் பறந்து சிறகடியுங்கள். மனிதப் பிறப்பு அதிசயமானது மனிதவாழ்க்கை அழகானது.