பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி தொழிற்சாலைகள் திறக்க நடவடிக்கை- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 

பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி தொழிற்சாலைகள் திறக்க நடவடிக்கை- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் முழுவதும் அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள், பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் என ஏழை எளிய மக்கள் நிவாரண பொருட்கள் பெற்று வருகின்றன. 

ttn

அதே போல விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மக்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிமுக சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறோம். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று அனைத்து மதத்தின் புனித நூல்களும் கூறுகின்றன. மக்கள் ஒருவருக்கொருவர் உதவி வருவதால், தற்போது மனிதாபிமானம் ஓங்கி நிற்கிறது என்று கூறினார். 

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மே 17 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.  விருதுநகரில்  பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி தொழிற்சாலைகள் திறப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.