பட்டய கிளப்பும் சூர்யா! சூரரைப் போற்று படத்தின் மாறா என்ற தீம் பாடல் வெளியீடு!  

 

பட்டய கிளப்பும் சூர்யா! சூரரைப் போற்று படத்தின் மாறா என்ற தீம் பாடல் வெளியீடு!  

என்.ஜி.கே, காப்பான் படங்களை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துவருகிறார்.

என்.ஜி.கே, காப்பான் படங்களை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துவருகிறார். சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு  ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஏர் டெக்கான் உரிமையாளர்  ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் இரண்டு போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து  சூர்யா பாடியுள்ள மாறா என்ற தீம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.  சூர்யாவின் குரலில் 29 நொடிகள் ஓடும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது.