பட்ஜெட்டுக்கு பிறகு பங்குச் சந்தை நல்லா இருந்தால், இந்த பங்குகள் குறித்து யோசிங்க…

 

பட்ஜெட்டுக்கு பிறகு பங்குச் சந்தை நல்லா இருந்தால், இந்த பங்குகள் குறித்து யோசிங்க…

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு சந்தை நிலவரம் நன்றாக இருந்தால், ஐ.சி.ஐ.சி.ஐ. உள்பட சில நிறுவன பங்குகள் நல்ல ஆதாயம் கொடுக்க வாய்ப்புள்ளதாக பல்வேறு தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன.

பங்குச் சந்தைகளை பொறுத்தவரை  மத்தியில் புதிய அரசு தாக்கல் செய்யும் முதல் முழு மத்திய பட்ஜெட் மிகப்பெரிய நிகழ்வு. ஏன்னா அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு என்ன செய்ய திட்டமிட்டுள்ளது என்பது  தெளிவாக அந்த பட்ஜெட் காட்டி விடும். இதனை கருத்தில் கொண்டே பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் எப்போதும் மத்திய பட்ஜெட் மீது கண் வைத்திருப்பார்கள்.

ஐசிஐசிஐ வங்கி

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 5ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மந்தமாக இருக்கும் பொருளாதார வளர்ச்சிக்கு புத்துயிர் கொடுக்க, வேலை வாய்ப்பு உருவாக்குதல், கிராமங்களில் நிலவும் பிரச்சினை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைளுக்கு தீர்வு காணும் வகையில் பட்ஜெட்டில் பல்வேறு கொள்கை நடவடிக்கைகளை அறிவிப்பார் என பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்துஸ்தான் யூனிலீவர்

இந்த நிலையில், மத்திய பட்ஜெட் பங்குச் சந்தைகளுக்கு ஒரு புத்துயிர் கொடுக்கும் வகையில் அமைந்து விட்டால், சில நிறுவனங்களின் பங்குகள் நல்ல ஆதாயத்தை கொடுக்கும் என தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன. அந்த நிறுவனங்களை பார்ப்போம்.

 

1.icici bank
2.marico
3.lic housing finance
4.bharat electronics
5.federal bank
6.kalpataru power transmission
7.hindustan unilever
8.dabur
9.colgate
10.hero motocorp
பொறுப்பு துறப்பு: மேலே கொடுக்கப்பட்ட நிறுவனங்கள் குறித்த பரிந்துரைகள் நிபுணர்களின் கணிப்பு மட்டுமே. ஆகையால் இந்த பங்குகள் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதாக இருந்தாலும், உங்களது நிதி ஆலோசகருடன் ஆலோசித்து மற்றும் பங்குச் சந்தை நிலவரங்களை கணக்கில் கொண்டும் சுயமாக நடவடிக்கை எடுங்கள்.