படு பயங்கர அப்செட்டில் இருக்கும் நடிகை ரோஜா…இன்று பதவி அறிவிக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி…

 

படு பயங்கர அப்செட்டில் இருக்கும் நடிகை ரோஜா…இன்று பதவி அறிவிக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி…

நடிகை ரோஜாவுக்கு ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் துணை முதலமைச்சர் பதவி, அமைச்சர் பதவி, சபாநாயகர் என்று எந்தப் பதவியும் தரப்படாத நிலையில் கடைசியாகாவருக்கு மகளிர் நல ஆணையத் தலைவர் தரப்படவிருப்பதாக தகவல்கள் நடமாடுகின்றன.

நடிகை ரோஜாவுக்கு ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் துணை முதலமைச்சர் பதவி, அமைச்சர் பதவி, சபாநாயகர் என்று எந்தப் பதவியும் தரப்படாத நிலையில் கடைசியாகாவருக்கு மகளிர் நல ஆணையத் தலைவர் தரப்படவிருப்பதாக தகவல்கள் நடமாடுகின்றன.

ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, முதல் முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆந்திராவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 30ம் தேதி மாநில முதல்வராக அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். கடந்த 8ம் தேதி 5 துணை முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் புதிய அரசு பதவியேற்ற பிறகு மாநில சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. 

இந்த தொடரில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் வெங்கட அப்பல் நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். புதிய சபாநாயகராக தம்மினேனி சீதாராம் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்க உள்ளார்.  14ம் தேதி  சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவையில் கவர்னர் உரையாற்ற உள்ளார். 15 மற்றும் 16ம் தேதி  சட்டப்பேரவைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 17 மற்றும் 18ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. 

இதற்கிடையே, அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள நடிகை ரோஜா உட்பட 2 பேரை சமாதானம் செய்ய ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார். இதில் ரோஜாவுக்கு மகளிர் நல ஆணைய தலைவர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் ரோஜா ஐதராபாத்தில் உள்ள வீட்டிலேயே தங்கியுள்ளார். கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார். இந்நிலையில் ரோஜாவை சமாதானப்படுத்துவதற்காக கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான விஜய் சாய் ரெட்டி ரோஜாவுக்கும், மங்களகிரி தொகுதி எம்எல்ஏ ராமகிருஷ்ணா ரெட்டிக்கும் போன் செய்து ஜெகன்மோகன் ரெட்டியை சந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் ஜெகன்மோகன் ரெட்டியை விரைவில் சந்திக்க உள்ளனர். இதில் ரோஜாவுக்கு மகளிர் நல ஆணைய தலைவர் பதவி தற்போது வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனக்கு எந்தப் பதவியும் வழங்கப்படாததை ஒட்டி தனது செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்து முற்றிலும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்த ரோஜா இன்று காலை வேறு வழியின்றி நிருபர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,’எனக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாதது குறித்து எந்த வருத்தமும் இல்லை. எப்போதும் போல் ஜெகன்மோகன் ரெட்டிக்கு உறுதுணையாக செயல்படுவேன்’என்று பட்டும் படாமலும் பதில்சொல்லிவிட்டு நகர்ந்தார். அவரது பேட்டியின்போது அவர் பயங்கர அப்செட்டில் இருந்தது தெளிவாகத் தெரிந்தது.