படு கேவலமாக ட்விட்டரில் மோதிக்கொண்ட தல-தளபதி ரசிகர்கள்! 

 

படு கேவலமாக ட்விட்டரில் மோதிக்கொண்ட தல-தளபதி ரசிகர்கள்! 

மீண்டும் ட்விட்டரில் தல-தளபதி ரசிகர்கள் மோதிக் கொண்டனர். 

சென்னை: மீண்டும் ட்விட்டரில் தல-தளபதி ரசிகர்கள் மோதிக் கொண்டனர். 

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். என்ன தான் இவர்கள் நண்பர்களாகப் பழகி வந்தாலும் இவரது ரசிகர்கள் மற்றும் எலியும், புனையுமாகவே உள்ளனர். காரணம் இருக்கிறதோ, இல்லையோ அடிக்கடி இவரது ரசிகர்கள் ட்விட்டரில் மோதிக் கொள்கின்றனர். 

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகவுள்ளது. அதனால் விஜய் ரசிகர்கள் #ஆகஸ்ட்8_பாடைகட்டு என்ற ஹாஷ் டாக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.  

twitter

அதே போல் விஜய் ரசிகர்களைப் பழிவாங்கும் விதமாக அஜித் ரசிகர்கள் #RIPActorVijay என்ற ஹாஷ் டாக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த இரண்டு ஹாஸ் டாக்யும் இந்தியா அளவில் ட்ரெண்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.