படுக்கையறையில் படுத்துக் கொண்டே செல்ஃபி எடுத்த ரைஸா… என்ன ஆச்சு தெரியுமா?!

 

படுக்கையறையில் படுத்துக் கொண்டே செல்ஃபி எடுத்த ரைஸா… என்ன ஆச்சு தெரியுமா?!

பிக்பாஸ் சீசன் முடிந்த பிறகு, நடிகர் ஹரிஷ் கல்யாணத்துடன் இணைந்து நடித்த “பியார் பிரேமா காதல்” படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பிரபல மாடலும், நடிகையுமான ரைஸா பிக் பாஸ் சீசன் 1-ல் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு, அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

ttn

குறிப்பாக, பிக் பாஸ் சீசனில் தூங்குவதற்கு பெயர் போனவர் ரைஸா. பிக்பாஸ் சீசன் முடிந்த பிறகு, நடிகர் ஹரிஷ் கல்யாணத்துடன் இணைந்து நடித்த “பியார் பிரேமா காதல்” படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது, எஃப்.ஐ.ஆர்., காதலிக்க யாருமில்லை, ஆலிஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

ttn

ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் இருக்கும் பொது இவர் செல்ஃபி மோடுக்கு மாறி, புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை  அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அதே போல, அவரது படுக்கையறையில் படுத்துக் கொண்டே செல்ஃபி எடுத்துள்ளார்.

ttn

அப்போது அவரது போன் தவறி அவரின் முகத்தின் மேல் விழுந்துள்ளது. இதில் அவரது உதட்டில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு செல்ஃபி எடுக்கும் போது என்ன நடந்தது என்பது பற்றி வீடியோவாக எடுத்து அவரது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முகத்தில் போன் விழுவதற்கு முன்னால் அவர் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதற்கு பலரும் கமெண்ட் மற்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.