படிக்கும் வயதில் திரைப்படம், செல்போன் வேண்டாம்! – வேலூர் கலெக்டரின் அட்வைஸ்

படிக்கும் வயதில் திரைப்படம், செல்போன் வேண்டாம்! – வேலூர் கலெக்டரின் அட்வைஸ்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு உறுதி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசினார்.

படிக்கும் வயதில் திரைப்படங்களைப் பார்த்துக் கெட்டுப் போக வேண்டாம் என்று வேலூர் கலெக்டர் மாணவர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு உறுதி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசினார்.

vellore-collector

அப்போது அவர், “நம் முன்னோர்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். பெண்கள்தான் வீட்டில் அனைவரையும் விசாரிப்பார்கள். இப்போது அப்பா, அம்மா என இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தைகளுக்கு போதுமான அன்பும் அரவணைப்பும் கிடைப்பதில்லை. இதனால் குழந்தைகள் தங்கள் மீது அன்பு செலுத்துபவர்களைத் தேடிச் செல்கிறார்கள்.
நாட்டில் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், டெல்லி ஆகிய ஐந்து மாநிலங்களில்தான் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 50 சதவிகிதம் நடைபெறுகிறது. குழந்தைகள் படிக்கும் வயதில் திரைப்படங்கள் பார்ப்பது, மொபைல் போன் பயன்படுத்தி வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் என சமூக ஊடகங்களில் மூழ்குவது அதிகரித்துள்ளது. இது அவர்களின் வாழ்க்கையைச் சீரழிக்கிறது. எனவே, படிக்கும் வயதில் குழந்தைகள் திரைப்படம் பார்ப்பது உள்ளிட்டவற்றைத் தவிர்க்க வேண்டும்” என்றார்