படப்பிடிப்பில் விபத்து: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுதீப்! 

 

படப்பிடிப்பில் விபத்து: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுதீப்! 

தமிழில் ‘நான் ஈ ‘ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் சுதீப்.  

தமிழில் ‘நான் ஈ ‘ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் சுதீப்.  அதைத்தொடர்ந்து, விஜய் நடித்த ‘புலி’,  இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘முடிஞ்சா இவன புடி’ போன்ற படங்களில் நடித்துள்ளார். 

இவர் தற்போது இந்தியில் தயாராகும் தபாங் 3 படத்தில் நடித்து வந்தார். அதுமட்டுமின்றி கன்னடத்தில்  ‘கோட்டி கோபா-3’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடைபெற்று வந்தது. 

அப்போது எதிர்பாரா விதமாக சுதீப் கீழே விழுந்துள்ளார். வலியால் துடித்த அவரை படக்குழு அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு முதுகு தண்டுவடத்தில் பலமாக அடிபட்டுள்ளதாகவும் சில வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளனர்.