படகு கவிழ்ந்து விபத்து: லைஃப் ஜாக்கெட் அளிக்கவில்லை… தத்தளித்தவர்களை காப்பாற்றாததால் சிறுவன் உயிரிழந்த பரிதாபம்

 

படகு கவிழ்ந்து விபத்து: லைஃப் ஜாக்கெட் அளிக்கவில்லை… தத்தளித்தவர்களை காப்பாற்றாததால் சிறுவன் உயிரிழந்த பரிதாபம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே படகு கவிழ்ந்த விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழக அரசு அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருவாடானை அருகே காரங்காடு சதுப்புநில காடுகளை சுற்றிப் பார்ப்பதற்காக உசுலனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 15 பேர் வனத்துறைக்கு சொந்தமான படகில் சென்றனர். படகோட்டி படகை வேகமாக திருப்பியதால் படகு கவிழ்ந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே படகு கவிழ்ந்த விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழக அரசு அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ship

திருவாடானை அருகே காரங்காடு சதுப்புநில காடுகளை சுற்றிப் பார்ப்பதற்காக உசுலனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 15 பேர் வனத்துறைக்கு சொந்தமான படகில் சென்றனர். படகோட்டி படகை வேகமாக திருப்பியதால் படகு கவிழ்ந்தது. படகிலிருந்த 15 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். படகோடி அவர்களுக்கு உதவி செய்யாமல் அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்துவந்த மீனவர்கள் தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்டனர். விஸ்வ அஜித் என்ற ஐந்து வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். 
வனத்துறை படகில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் 15 பேரில் ஒரு சிலருக்கு மட்டுமே உயிர் காக்கும் லைஃப் ஜாக்கெட் வழங்கப்பட்டதாகவும், அனைவருக்கும் வழங்கியிருந்தால் ஒரு உயிர் போயிருக்காது என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்த மாவட்ட கலெக்டர் வீரராகவன், “விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஊழியர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா பயணிகளுக்கு முழு பாதுகாப்பை உறுதி செய்யும் வரை தற்காலிகமாக படகு போக்குவரத்து நிறுத்தப்படும்” என்றார்.