பஞ்சாயத்து முடிந்து ஒரு வழியாக விமல்-ஓவியா படம் வெளியாகிறது!

 

பஞ்சாயத்து முடிந்து ஒரு வழியாக விமல்-ஓவியா படம் வெளியாகிறது!

விமல்- ஓவியா நடித்துள்ள களவாணி 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சென்னை: விமல்- ஓவியா நடித்துள்ள களவாணி 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு வெளிவந்த படம் களவாணி.  விமல்- ஓவியா நடிப்பில் வெளியான அப்படம் ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. 

விமல்- ஓவியா

சற்குணம் இயக்கியுள்ள இப்படத்தில் விமல், ஓவியா, விக்னேஷ்காந்த், சரண்யா, இளவரசு, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 28ம் தேதி படம் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்ததுள்ளது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஓவியாவிற்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளதால் கண்டிப்பாக இந்த படம் வெற்றியடையும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 

முன்னதாக இப்படத்தில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாகப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.