பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை : சுரேஷிடம் இருந்து ஒன்றே கால் கிலோ தங்கம் பரிமுதல்..!

 

பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை : சுரேஷிடம் இருந்து ஒன்றே கால் கிலோ தங்கம் பரிமுதல்..!

கொள்ளையில் ஈடுபட்ட முருகன், சுரேஷ் மற்றும் மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

திருச்சி லலிதா ஜுவல்லரியில் 13 கிலோ தங்கம் கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களைக் கண்டுபிடிக்கத் தனிப்படை காவல்துறையினர் அமைக்கப் பட்டு, கொள்ளையில் ஈடுபட்ட முருகன், சுரேஷ் மற்றும் மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  கொள்ளையன் முருகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் இவர்களே கைவரிசை காட்டியது அம்பலமானது.

bank

 

அதனால்,  கொள்ளையன் சுரேஷை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் நீதிமன்றத்திடம் ஒப்புதல் கேட்டது. நீதிமன்றம் அளித்த ஒப்புதலின் பேரில், 7 நாட்களாக காவல்துறையினர் சுரேஷிடம் விசாரணை மேற்கொண்டனர்.

suresh

அந்த விசாரணையில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த 2.5 கிலோ தங்கத்தில் ஒன்றே கால் கிலோ தங்கத்தை மதுரை சோழவந்தான் மலைப் பகுதியில் புதைத்து வைத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதனையடுத்து, காவல்துறையினர் அந்த நகையைப் பறிமுதல் செய்தனர். மேலும், மீதமுள்ள தங்கம் குறித்து சுரேஷிடம் விசாரணை தொடர்ந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.