பஜனை பாடலுடன் ராமாயண எஸ்பிரஸ்! – ரயில்வே வாரியம் திட்டம்

 

பஜனை பாடலுடன் ராமாயண எஸ்பிரஸ்! – ரயில்வே வாரியம் திட்டம்

அயோத்தி தொடங்கி ராமேஸ்வரம் வரை 16 இரவு,17 நாள் பயண ஶ்ரீராமாயணா எக்ஸ்பிரஸ் சேவை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. மொத்தம் 800 பேர் வரை இந்த பயணத்தில் பங்கேற்கலாம்

இந்துக்களின் முக்கிய கடவுளான ராமர் தொடர்பான இடங்களுக்கு செல்லும் ராமாயண எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அடுத்த மாத இறுதிக்குள் தொடங்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.
அயோத்தி தொடங்கி ராமேஸ்வரம் வரை 16 இரவு,17 நாள் பயண ஶ்ரீராமாயணா எக்ஸ்பிரஸ் சேவை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. மொத்தம் 800 பேர் வரை இந்த பயணத்தில் பங்கேற்கலாம்.

ramayana.jpg1

இதில் 40 பேர் மட்டும் இலங்கை வரை சென்று ராமர் தொடர்புடைய இடங்களை பார்க்கும் வகையில் பயணத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

ramayana

இந்த ரயில் சேவையைில் கூடுதல் வசதிகளை மேற்கொள்ள ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. ரயிலுக்குள் ராமாயண பஜனைகள், ராமாயண காட்சிகள் உருவாக்கி புதிய பயண அனுபவத்தை பக்தர்களுக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், ராமர் தொடர்புடைய மேலும் சில இடங்கள் இந்த பயணத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு புதிய பயண அட்டவணை விரைவில் இறுதி செய்யப்படும் என்றும், ஹோலி பண்டிகைக்குப் பிறகு இந்த ரயில் சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.