பச்சை பட்டாணி மசாலா

 

பச்சை பட்டாணி மசாலா

சாதம், சாம்பாருடன் கூட்டாக பச்சை பட்டாணி மசாலா செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்

சாதம், சாம்பாருடன் கூட்டாக பச்சை பட்டாணி மசாலா செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

வேகவைத்த பச்சை பட்டாணி : 250 கிராம் கிராம்
வெங்காயம் : 1 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி : 1 பொடியாக நறுக்கியது 
கடுகு : 1 தேக்கரண்டி 
உளுந்து :1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் :1/2 தேக்கரண்டியளவு
மிளகாய்த்தூள். : 1 டீஸ்பூன்
பூண்டு. : 3 பல்(பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை : சிறிது
கொத்தமல்லி. : சிறிது

செய்முறை:

ஒரு கடாயில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு ,உளுந்தம்பருப்பு, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். அத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

நன்கு வதங்கிய பிறகு வேகவைத்த பச்சை பட்டாணியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

மஞ்சள்தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான உப்பு, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

மசாலா கெட்டிப்பதம் வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். மணக்க மணக்க சுவையான பச்சை பட்டாணி மசாலா ரெடி.