பசியால் அழுத குழந்தைக்கு பாலூட்டிய காவலர்கள்; ஹைதராபாத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

 

பசியால் அழுத குழந்தைக்கு பாலூட்டிய காவலர்கள்; ஹைதராபாத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

தேர்வு எழுத தாய் சென்ற பிறகு குழந்தை அழுததால் அக்குழந்தைக்கு பணியில் இருந்த காவலர்கள் பாலூட்டிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றது.

ஹைதராபாத்: தேர்வு எழுத தாய் சென்ற பிறகு குழந்தை அழுததால் அக்குழந்தைக்கு பணியில் இருந்த காவலர்கள் பாலூட்டிய நெகிழ்ச்சி சம்பவம் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

ஹைதராபாத்தில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வை எழுதுவதற்காக தாய் ஒருவர் கைக்குழந்தையுடன் சென்றிருக்கிறார். அப்போது குழந்தையை விட்டுவிட்டு அவர் தேர்வு எழுதும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தேர்வு எழுதி கொண்டிருக்கும் போது அவரது குழந்தை பசியால் அழுதது.

அப்போது அங்கு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி அந்த குழந்தையை கையில் ஏந்தி கொண்டு குழந்தைக்கு புட்டிப்பால் ஊட்டினார். மேலும் அவருடன் இருந்த காவல்துறை அதிகாரிகள் அந்த குழந்தையின் அழுகையை கட்டுப்படுத்துவதற்காக வேடிக்கைகளும் காண்பித்தனர். இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களை நெகிழ்வடைய செய்தது. மேலும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஏராளமான பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.