பங்கு ஒன்றுக்கு ரூ.4.25………இடைக்கால டிவிடெண்ட் அறிவித்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்… மத்திய அரசுக்கு ரூ.2,060 கோடி ஜாக்பாட்….

 

பங்கு ஒன்றுக்கு ரூ.4.25………இடைக்கால டிவிடெண்ட் அறிவித்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்… மத்திய அரசுக்கு ரூ.2,060 கோடி ஜாக்பாட்….

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தனது பங்குதாரர்களுக்கு இடைக்கால டிவிடெண்டாக பங்கு ஒன்றுக்கு ரூ.4.25 வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் அந்நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்கு மூலதனத்தை வைத்திருக்கும் மத்திய அரசுக்கு ரூ.2,060 கோடிக்கு மேல் கிடைக்கும்.

வரி வசூல் நிலவரம் திருப்தி இல்லாதது, பங்கு விற்பனை வாயிலாக திரட்ட நினைத்த தொகையும் திரட்ட முடியாத நிலை போன்ற காரணங்களால் போதிய வருவாய் இல்லாமல் மத்திய அரசு பரிதவித்து வருகிறது. இந்நிலையில், பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இடைக்கால டிவிடெண்ட் அறிவித்துள்ளதால் மத்திய அரசுக்கு சில ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.

டிவிடெண்ட்

இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குனர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 2019-20ம் நிதியாண்டுக்கு பங்குதாரர்களுக்கு இடைக்கால டிவிடெண்டாக முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக அந்நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், பங்குதாரர்களுக்கு இந்த நிதியாண்டுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ.10 முக மதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ4.25 வழங்கப்படும் என நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு அறிவித்துள்ளது என தெரிவித்துள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் 51.50 சதவீத பங்குகளை மத்திய அரசு தன் கைவசம் வைத்துள்ளது. இதனால் தற்போது இந்நிறுவனம் அறிவித்துள்ள இடைக்கால டிவிண்டால் மத்திய அரசுக்கு மட்டும் ரூ.2,060 கோடிக்கு மேல் கிடைக்கும். வருவாய் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இடைக்கால டிவிடெண்ட் வாயிலான வருவாய் மத்திய அரசுக்கு பெரும் ஆறுதலாக இருக்கும்.