பங்குச் சந்தைகளை கதற கதற வைக்கும் கொரோனா வைரஸ்….. முதலீட்டாளர்களுக்கு ரூ.7.68 லட்சம் கோடி இழப்பு… சென்செக்ஸ் 2,713 புள்ளிகள் வீழ்ச்சி….

 

பங்குச் சந்தைகளை கதற கதற வைக்கும் கொரோனா வைரஸ்….. முதலீட்டாளர்களுக்கு ரூ.7.68 லட்சம் கோடி இழப்பு… சென்செக்ஸ் 2,713 புள்ளிகள் வீழ்ச்சி….

கொரோனா வைரஸ் பீதி காரணமாக இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடுமையான சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதன் அச்சம் காரணமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் பலத்த அடி வாங்கியது. அதன் தாக்கல் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தனர் இது போன்ற காரணங்களால் பங்கு வர்த்தகம் மரண அடி வாங்கியது. 

பங்கு வர்த்தகத்தில் சரிவு

அதேவேளை, அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டது, இந்திய ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் மொத்த விலை பணவீக்கம் குறைந்தது போன்ற சாதகமான செய்திகள் வெளியானபோதும் அவற்றால் பங்கு வர்த்தகத்தின் சரிவை தடுத்து நிறுத்த முடியவில்லை. சென்செக்ஸ் கணக்கிட உதவும் இண்டஸ்இந்த் வங்கி, டாடா ஸ்டீல், எச்.டி.எப்.சி. மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட 30 நிறுவனங்களின் பங்குகளின் விலையும் இறங்கியது.

இந்திய ரிசர்வ் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 439 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,019 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 160 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டிலியடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.121.75 லட்சம் கோடியாக சரிந்தது. ஆக, இன்று மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.7.68 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

சென்செக்ஸ், நிப்டி

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,713.14 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 31,390.07 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 757.80 புள்ளிகள் சரிந்து 9,197.40 புள்ளிகளில் முடிவுற்றது.