பக்காவா பிளான் போட்டு, பாதிரியாரின் வீட்டை எல்.ஐ.சியில் அடமானம் வைத்த கும்பல் : 48 லட்சம் மோசடி நடந்ததால் அதிர்ந்து போன அதிகாரிகள் !

 

பக்காவா பிளான் போட்டு, பாதிரியாரின் வீட்டை எல்.ஐ.சியில் அடமானம் வைத்த கும்பல் : 48 லட்சம் மோசடி நடந்ததால் அதிர்ந்து போன அதிகாரிகள் !

கடந்த ஜனவரி மாதம் திடீரென எல்.ஐ.சி நிறுவனத்தில் இருந்து வின்சண்ட் வீட்டுக்கு கால் ஒன்று வந்துள்ளது.

சென்னை அயனாவரத்தில் வசித்து வரும் பாதிரியார்  வின்சண்ட்(47). அவசர தேவைக்காக மயிலாப்பூரில் வசித்து வரும் புரோக்கர் லோகநாதன் என்பவரிடம் 20 லட்சம் ரூபாய் கடன் கேட்டிருக்கிறார். அப்போது லோகநாதன் வின்சண்ட்டின் வீட்டு பத்திரத்தை வாங்கிக் கொண்டு 5 லட்சம் ரூபாய் மட்டும் வாங்கி கொடுத்துள்ளார். மீதி 15 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறி விட்டுத் தரவே இல்லையாம். 

ttn

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் திடீரென எல்.ஐ.சி நிறுவனத்தில் இருந்து வின்சண்ட் வீட்டுக்கு கால் ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் , நீங்கள் எங்களிடம் வாங்கிய 48 லட்சம் ரூபாய்க்கு தவணை கட்டாததால் வீட்டை ஜப்தி செய்யப் போகிறோம் என்று கூறியுள்ளனர். இதனால் வின்சண்ட்டும் அவரது குடும்பத்தினரும் மிகுந்த குழப்பம் அடைந்துள்ளனர். இதுமட்டுமில்லாமல் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி வின்சண்ட் வீட்டுக்கு வந்த சிலர் வீட்டை விட்டு வெளியேறும் படி மிரட்டியுள்ளனர். 

இது குறித்து வின்சண்ட் அயனாவர காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், புரோக்கர் லோகநாதனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது லோகநாதன்,  வின்சண்ட் இடம் இருந்து பத்திரத்தை வாங்கி அதனை ராஜி என்பவரிடம் கொடுத்து அவரிடம் இருந்து தான்  வின்சண்ட்க்கு 5 லட்சம் ரூபாய் வாங்கி கொடுத்ததாகவும், பின்னர் ராஜியும் லோகநாதனும் சேர்ந்து அந்த வீட்டை ரூபாய் 62 லட்சத்துக்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ராஜேஷ் என்பவருக்கு விற்றதாகவும் கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து, அந்த வீட்டை வாங்கிய ராஜேஷ் எல்.ஐ.சியில் இருந்து பணம் வாங்கியதும், அப்போதிலிருந்து தவணை செலுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். 

ttn

இதனையடுத்து இந்த வழக்கில் நிலம் வாங்கியவர், விற்றவர், போலி ஆவணங்கள் தயாரித்தவர் என 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மூளையாக செயல்பட்ட லோகநாதனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், மோசடியில் ஈடுபட்ட 6 பேரும் தலைமறைவாக உள்ளதால் போலீசார் அவர்களைத் தேடி வருகின்றனர்.