பக்கவாதத்தால் பாதித்த தாய் ! 5 வயது குழந்தை காப்பாற்றிய அதிசயம் !

பக்கவாதத்தால் பாதித்த தாய் ! 5 வயது குழந்தை காப்பாற்றிய அதிசயம் !

தாய்க்கு திடீரென நிலைதடுமாறி கீழே விழ, செல்போனை பயன்படுத்தி மகள் காப்பாற்றிய சம்பவம் அயர்லாந்தில் நடைபெற்றுள்ளது.
5 வயது குழந்தைகளுக்கு செல்போனில் விளையாட மட்டுமே தெரியும். மிஞ்சிப் போனால் அதில் பேசுவார்கள். ஆனால் செல்போனை பயன்படுத்தி தாயின் உயிரை காப்பாற்றிய அதிசய சம்பவம் நடைபெற்றுள்ளது.

அயர்லாந்தின் கார்க் பகுதியில் கால்வின், மேரி தம்பதி வசிக்கின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். சில நாள்களுக்கு முன்பு கணவர் பணிக்கு சென்றுவிட்டார். வீட்டில் மேரி குழந்தைகளுடன் இருந்துள்ளார்.

thumnail

மேரிக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டு நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால் பயந்து போன குழந்தை பிரியா சற்றும் யோசிக்காமல் தான் விளையாடிக் கொண்டிருந்த செல்போனை எடுத்தார். செல்போனில் உள்ள ஃபேஸ்டைம் செயலியைப் பயன்படுத்தி அப்பாவிடம் தகவல் தெரிவித்தார். மேலும் அந்த செல்போனிலேயே தன்னுடைய தாயின் நிலையை வீடியோவில் காட்டினார். இதைப் பார்த்த கணவர் அதிர்ச்சி அடைந்தார்.

ireland

உடனே வரமுடியாது என்ற சூழ்நிலையில் உறவினருக்கு தகவல் அளித்தார். அதன்பின், உடனடியாக அவரது வீட்டிற்கு வந்த உறவினர் மேரி நிலைகுலைந்து இருப்பதை பார்த்து உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் மேரி கார்க் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். அவருக்கு பக்கவாதம் வந்திருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். கால்வின் தனது மகளுக்கு ஃபேஸ்டைம் செயலிலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்துள்ளார்.