பக்கத்து வீட்டுக்காரருக்கும் கொரோனா வரனும்! எச்சில் துப்பிச்சென்ற பெண்!!

 

பக்கத்து வீட்டுக்காரருக்கும் கொரோனா வரனும்! எச்சில் துப்பிச்சென்ற பெண்!!

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் மிகப்பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. அனைத்து நாட்டு விமான நிலையங்களிலும் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் மிகப்பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. அனைத்து நாட்டு விமான நிலையங்களிலும் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. தங்களுடைய நாட்டில் இந்த வைரஸ் பாதிப்பு வந்து விடக் கூடாது என எல்லா நாடுகளுமே மிகவும் அதிக அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 910 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 97 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிசிடிவி

இந்நிலையில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்ருவரும் பெண் ஒருவர், இரவு 10 மணிக்கு மேல் தனது வீட்டிலிருந்து வெளியே வந்து பக்கத்துவீட்டின் வாசலில் வேண்டுமென்றே எச்சில் துப்பிச்சென்ற காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி  கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த பெண் அண்டை வீட்டாருக்கும் வைரஸ் பரவ வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் அந்த குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் 30 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் வெளியானதையடுத்து காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சியை சீன செய்தி நிறுவனமான கான் கான் வெளியிட்டுள்ளது.