“பக்கத்துல வந்தா கட்டிபிடிச்சிடுவேன்” : தப்பி சென்ற கொரோனா நோயாளியின் அட்ராசிட்டி!

 

“பக்கத்துல வந்தா கட்டிபிடிச்சிடுவேன்” : தப்பி சென்ற கொரோனா நோயாளியின் அட்ராசிட்டி!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது.  சென்னையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக   பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 570 ஆக உயர்ந்துள்ளது

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதன் காரணமாக தான் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 52பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1937 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது.  சென்னையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக   பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 570 ஆக உயர்ந்துள்ளது. 

tt

இந்நிலையில் சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 45 வயதான நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அவருக்கு சென்னை  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த நபர் அங்கிருந்து தப்பித்து வீட்டிற்கு சென்றுள்ளார். 

rr

இதுகுறித்து போலீசார் அவரது வீட்டிற்கு சென்று விசாரித்ததில் சிகிச்சை பெறுவதில் பயமாக உள்ளதால் அங்கிருந்து வந்ததாக கூறியுள்ளார். அப்போது போலீசார் அவரை மீண்டும்  மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்கு அந்த நபரோ, தன்னை பிடிக்க முயன்றால் கட்டிப்பிடித்து விடுவேன் என மிரட்டியுள்ளார். பின்னர் காவலர்கள் அவரை சமாதானம் செய்தும், மருத்துவமனைக்கு வர மறுத்து வருகிறார். இதனால் அப்பகுதி மக்கள் பயத்தில் உள்ளனர்.