பகவான் ராமர் விரும்புகிற நேரத்தில் தான் கோயிலுக்கான அனுமதி கிடைத்திருக்கிறது! பற்ற வைக்கும் சுப்ரமணிய சுவாமி!

 

பகவான் ராமர் விரும்புகிற நேரத்தில் தான் கோயிலுக்கான அனுமதி கிடைத்திருக்கிறது! பற்ற வைக்கும் சுப்ரமணிய சுவாமி!

இதே கருத்தை அறிவுறுத்தி நாட்டின் அனைத்து மதத் தலைவர்களும் கருத்துக்களைத் தெரிவித்து இருந்தனர்

அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து யாரும் எந்தவிதமான கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும், தீர்ப்பு எப்படியிருந்தாலும் நாட்டில் அமைதியை காக்க அனைவரும் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார்.

ayothi

இதே கருத்தை அறிவுறுத்தி நாட்டின் அனைத்து மதத் தலைவர்களும் கருத்துக்களைத் தெரிவித்து இருந்தனர். இன்று அயோத்தியின் பிரச்சனைக்குரிய நிலத்தைப் பற்றிய தீர்ப்பு வெளியான நிலையில், வழக்கின் தீர்ப்பு குறித்து சுப்ரமணிய சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை பகிர்ந்துள்ளார். 

subramanian ttn

முன்னதாக சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு உள்ளிட்ட அனைத்து இடைக்கால மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவரது ட்விட்டர் பக்கத்தில், 
தனக்கு கோயில் எப்போது கட்ட வேண்டும் என்று ராமர் விரும்புகிறாரோ அப்போது தான் அதற்கான பச்சை சிக்னல் கிடைத்திருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், பலரும் இந்த வழக்கில் ஆரம்பம் முதலே சுப்ரமணிய சுவாமி காட்டிய ஈடுபாடும், அவரது தொடர் முயற்சிகளையும் பாராட்டி பதிவிட்டு வருகிறார்கள். அதே சமயம், நாட்டில் அமைதியைக் காக்க வேண்டும் என்று பல அரசியல் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கும் நிலையில், சுப்ரமணிய சுவாமி இப்படி பொறுப்பில்லாமல் பதிவு செய்திருக்க வேண்டாம் என்கிற கருத்துக்களும் வருகின்றன.