நோ பார்க்கிங் பகுதியில் கார், ரூ.23 ஆயிரம் வரை அபராதம்!

 

நோ பார்க்கிங் பகுதியில் கார்,  ரூ.23 ஆயிரம் வரை அபராதம்!

மும்பையில் இன்று முதல் நோ பார்க்கிங் பகுதியில் பைக், கார் நிறுத்தினால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.23 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டியது இருக்கும்.

இந்தியாவின் வர்த்தக மையமாக மும்பை விளங்குகிறது. மும்பையில் பைக், கார் போன்ற வாகனங்கள் பயன்பாடு அதிகம். வாகன ஓட்டிகள் தங்களது பைக் மற்றும் கார்களை சாலையில் இடம் கிடைக்கும் பகுதியில் நிறுத்தி செல்வதால் போக்குவரத்து இடைஞ்சல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. குறிப்பாக நோ பார்க்கிங் பகுதியில் வாகனத்தை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிந்தும் அங்கு வாகனத்தை நிறுத்துவது அதிகரித்து வருகிறது.

மும்பை சாலை

இதற்கு முடிவு கட்ட பிரிஹன்மும்பை மாநகராட்சியும், மும்பை போக்குவரத்து போலீசாரும் அதிரடி முடிவு எடுத்தனர். இதன்படி, நோ பார்க்கிங் பகுதியில் பைக் மற்றும் கார்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.23 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இன்று முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருகிறது. இதனால் மும்பை சாலைகளில் வாகனத்தை ஓட்டுவதை விட பார்க்கிங் செய்வதுதான் டிரைவர்களுக்கு கடினமாக இருக்கும். 

கார் பார்க்கிங்

நோ பார்க்கிங் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தினால் ரூ.5,000 முதல் ரூ.8,300 வரை அபராதம் விதிக்கப்படும். அதேசமயம் கனரக வாகனங்கள் என்றால் அபராத தொகை ரூ.15,000 முதல் ரூ.23,250 வரை இருக்கும். இந்த அபராத தொகையில் இழுவை கட்டணம் அடங்கும். இந்த அபராத நடவடிக்கை மூலம் போக்குவரத்து பிரச்சினை குறையும் என மாநகராட்சியும், போக்குவரத்து போலீசாரும் கருதுகின்றனர்.