நோ கட்டுப்பாடு…எத்தனை கல்யாணம் வேணும்னாலும் பண்ணிக்கலாம் – அமெரிக்காவில் புதிய சட்டம்

 

நோ கட்டுப்பாடு…எத்தனை கல்யாணம் வேணும்னாலும் பண்ணிக்கலாம் –  அமெரிக்காவில் புதிய சட்டம்

ஆணும், பெண்ணும் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று யூட்டா மாகாணத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

வாஷிங்டன்: ஆணும், பெண்ணும் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று யூட்டா மாகாணத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஒருவனுக்கு ஒருத்தி அல்லது ஒருத்திக்கு ஒருவன் என்ற கொள்கை இந்தியாவில் திருமண விஷயத்தில் சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. முறையாக விவாகரத்து செய்யாமல் இன்னொரு நபரை யாரும் திருமணம் செய்யக் கூடாது என்பது நம் நாட்டில் சட்டம். அதை மீறுவோருக்கு தண்டனை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகளில் பெரும்பாலான தம்பதிகளுக்குள் இருக்கும் உறவு புளித்து விடுகிறது. இதனால் இன்னொரு நபரின் உறவை மனம் தேட ஆரம்பிக்கிறது. கூடவே பிரச்சனைகளும் தலை தூக்குகின்றன.

ttn

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள யூட்டா என்ற மாகாணத்தின் மாநில செனட் சபை இயற்றியுள்ள சட்டம் இந்தியர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுக்கலாம். அதாவது ஒரு ஆண் பல பெண்களையும், ஒரு பெண் பல ஆண்களையும் ஒரே சமயத்தில் திருமணம் செய்து கொண்டு உறவில் இருப்பது குற்றமில்லை என்று அறிவிக்கும் சட்டத்துக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முந்தைய சட்டத்தின்படி, பலருடன் திருமண உறவு கொண்டுள்ளவர்கள் 5  ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.